25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


விளையாட்டு (SPORTS)

Sep 02, 2025

டில்லியில் உலக பாட்மின்டன்30வது சீசனை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டில்லியில் நடத்திட, பி.டபிள்யு.எப்., அனுமதி வழங்கியது .

 1977 முதல், சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு. எப்.,) சார்பில், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. சமீபத்தில் பாரிசில், 29வது சீசன் நடந்தது.. இந்தியாவில் உலகபாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர்30வது சீசனை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டில்லியில், நடக்கவுள்ளது. சமீபத்தில் முடிந்த இத் தொடரின் இரட்டையரில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி வெண்கலம் கைப்பற்றியது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடப்பதால், இந்திய நட்சத்திரங்கள்பதக்கங்கள் வென்றுசாதிக்கலாம்.

Sep 01, 2025

உலக பாட்மின்டன் தொடரில் வெண்கலம் வென்ற சாத்விக்-சிராக். இந்தியாவுக்கு கிடைத்த 15வது பதக்கம்.

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில், ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் சென் போ யாங், லியு யி ஜோடியை எதிர் கொண்டது ஒரு மணி நேரம், 7 நிமிடம் நீடித்த போட் டியில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 19-21, 21-18, 12-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெண்கலப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தது. இது, உலக பாட்மின்டன் அரங்கில் சாத்விக்,  சிராக் ஜோடி கைப்பற்றிய 2வது பதக்கம். ஏற்கனவே 2022ல் வெண்கலம் வென்றிருந்தது.இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி, 10 வெண்கலம் கிடைத்துள்ளது.

Sep 01, 2025

யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில்4வது சுற்றுக்கு முன்னேறிய ஸ்வி யாடெக், சின்னர், கோகோ காப் .

. யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில், பெண்கள் ஒற்றையர் 3வது சுற்றில் போலந்தின் ஸ்வியாடெக், ரஷ்யாவின் அனா கலின்ஸ்கயா மோதினர். ஸ்வியாடெக் 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.மற்றொரு 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், போலந்தின் மாக் டலினா பிரீச் மோதினர். இதில் கோகோ காப் 6-3, 6-1 என சுலபமாக வெற்றி பெற்றார். ஜப்பானின் நவோமி ஒசாகா 6-0, 4-6, 6-3 என ஆஸ்திரே லியாவின் டாரியா கசட் கினாவை  வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

Sep 01, 2025

ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன், மீண்டும் வெற்றி பெற்ற இந்தியா..

ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன்  பீஹாரின் ராஜ்கிர் நகரில் ,'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. இந்திய அணிக்கு 4வது நிமிடத்தில் மன்தீப் சிங், ஒரு 'பீல்டு' கோல் அடித்தார்.அடுத்த நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இந்தியா 2-0 என வலுவான முன்னிலை பெற்றது. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Sep 01, 2025

தமிழக வீரர் யுகன் ஆசிய துப்பாக்கி சுடுதலில் சாதனை.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பி யன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில்,  'யூத் டிராப்' பிரிவில் இந்திய வீரர் யுகன் 14, பங்கேற்றார். தனிநபர் பிரிவில் 116 புள்ளிகளு டன் தங்கப்பதக்கத்தை வென்றார். ஆண்கள் அணிகள் பிரிவில் யுகன் (116 புள்ளி), அஹ் யான் சையத் அலி (102), மானவ்ராஜ் (90) அடங்கிய  இந்திய அணி 308 புள்ளிக ளுடன் தங்கம் வென்றது. கலப்பு அணிகள்பிரிவில் யுகன் (63), தனிஸ்கா (58) ஜோடி, 121 புள்ளி களுடன் தங்கம் கைப்பற்றியது. கோவையை சேர்ந்த யுகன் இதன் மூலம் தங்கம் வென்ற இளம் வீரர் என்ற சாதனைபடைத்தார் .

Sep 01, 2025

மத்திய ஆசிய கால்பந்து சங்கத்தின் (சி.ஏ.எப்.ஏ.,) சார்பில், 'நேஷன்ஸ்' கோப்பை தொடரில் இந்தியா வெற்றி .

 'நேஷன்ஸ்' கோப்பை தொடர் ,மத்திய ஆசிய கால்பந்து சங்கத்தின் (சி.ஏ.எப்.ஏ.,) சார்பில் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தானில் ,மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு,போட்டிகள் லீக் முறையில் நடக் கின்றன. இரு பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் பைனலுக்கு முன்னேறும்.உலகத் தரவரிசையில் 133 வது இடத்தில் உள்ள இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் 106 இடத்திலுள்ள தஜிகிஸ்தானை முதல் போட்டியின். முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக் கில் வெற்றி பெற்றது. கடந்த 17 ஆண்டில் முதன் முறையாக தஜிகிஸ்தானை வென்றது.தனது இரண்டாவது போட்டியில் ஈரானை சந்திக்க உள்ளது. 

Aug 30, 2025

ஆண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன் இந்தியா வெற்றி.

ஆண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன்நேற்று பீஹாரின் ராஜ்கிர் நகரில் துவங்கியது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா, மலேசியா, கஜகஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.உலகத் தரவரிசையில் 7வது இடத்திலுள்ள இந்திய அணி 'ஏ' பிரிவில், சீனா, ஜப்பான் (ஆக. 31), கஜகஸ்தான் (செப்.1) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது முதல் போட்டியில் 23வது இடத்திலுள்ள சீனாவை சந்தித்தது. போட்டியின் 47 வது நிமிடம் இந்தியாவுக்கு ''பெனால்டி கார்னர்' கிடைத்தது. இம்முறை ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்து உதவினார். இது ஹர்மன்பிரீத் அடித்த 'ஹாட்ரிக்' கோல் ஆனது. முடிவில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

Aug 30, 2025

டைமண்ட் லீக் ஈட்டி ஏறிதல் போட்டியில் 2வது இடம் பிடித்த நீரஜ் சோப்ரா.

 டைமண்ட் லீக் போட்டி உலக தடகள கூட்டமைப்பு சார்பில் ,16வது சீசன் பைனல், சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் நடந்தது. ஈட்டி ஏறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா உட்பட, 7 பேர் பங்கேற்றனர். டோக்கியோ (2021, தங்கம்), பாரிஸ் (2024, வெள்ளி) என அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மீது எதிர்பார்ப்பு இருந்தது. முதல் இரு வாய்ப்பில் 84.35, 82.00 மீ., துாரம் மட்டும் எறிந்த இவர், அடுத்த 3 வாய்ப்புகளில் பவுல் செய்தார். கடைசி, 6வது வாய்ப்பில் அதிகபட்சம் 85.01 மீ., துாரம் மட்டும் எறிந்து, இரண்டாவது இடம் பிடித்தார். டைமண்ட் லீக் போட்டி உலக தடகள கூட்டமைப்பு சார்பில் ,16வது சீசன் பைனல், சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் நடந்தது. ஈட்டி ஏறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா உட்பட, 7 பேர் பங்கேற்றனர். டோக்கியோ (2021, தங்கம்), பாரிஸ் (2024, வெள்ளி) என அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மீது எதிர்பார்ப்பு இருந்தது. முதல் இரு வாய்ப்பில் 84.35, 82.00 மீ., துாரம் மட்டும் எறிந்த இவர், அடுத்த 3 வாய்ப்புகளில் பவுல் செய்தார். கடைசி, 6வது வாய்ப்பில் அதிகபட்சம் 85.01 மீ., துாரம் மட்டும் எறிந்து, இரண்டாவது இடம் பிடித்தார். 

Aug 30, 2025

இந்தியா ஆசிய துப்பாக்கி சுடுதலில் 31 பதக்கங்கள் வென்றது. ஒட்டுமொத்தமாக (சீனியர், ஜூனியர், யூத்) போட்டியில் 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் என, 103 பதக்கம் வென்றது இந்தியா.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன்  கஜகஸ்தானில், ஆண்கள் அணிகளுக்கான 25 மீ., 'சென்டர் பயர் பிஸ்டல்' பிரிவில் ராஜ்கன்வர் சிங் சாந்து (583.22 புள்ளி),குர்பிரீத் சிங் (579.17), அங்குர் கோயல் (571.18) அடங்கிய இந்திய அணி, 1733.57 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வென்றது. இதன் தனிநபர் பிரிவில் ராஜ்கன்வர் சிங் சாந்து தங்கம் வென்றார். இந்தியாவின் அங்கூர் மிட்டல் ஆண்களுக்கான 'டபுள் டிராப்' பிரிவில் தங்கம் வென்றார். அனுஷ்கா (93 புள்ளி), பிரனில் (89), ஹபிஸ் (87) அடங்கிய இந்திய அணி  பெண்கள் அணிகளுக்கான டிராப்' பிரிவில் தங்கத்தை கைப்பற்றியது. தனிநபர் பிரிவில் 'டாப்-3' இடம் பிடித்த இவர்கள் பதக்கம் வென்றனர்.50 மீ., 'ரைபிள் 'புரோன்' பெண்களுக்கான தனி நபர் பிரிவில் இந்தியாவின் மணினி கவுசிக், 617.8 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார். இதன் அணிகள் பிரிவில் மணினி கவுசிக் (617.8), சுரபி பரத்வாஜ் ரபோல் (614.4), வினோத் விதர்சா (613.8) அடங் கிய இந்திய அணி, 1846.0 புள்ளிகளுடன் வெள்ளிப்ப தக்கத்தை கைப்பற்றியது. சீனியர் பிரிவில் 14 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என, 31 பதக்கம் வென்ற இந்தியா 2வது இடம் பிடித்தது. ஒட்டுமொத்தமாக (சீனியர், ஜூனியர், யூத்) 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் என, 103 பதக்கம் வென்றது இந்தியா. 

Aug 30, 2025

'ஹாக்கி மந்திரவாதி' என போற்றப்பட் ஹாக்கி தயான் சந்த் சாதனைக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க ஹாக்கி நட்சத்திரங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை.

.இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த். 1905, ஆக. 29ல் உ.பி.,யில் பிறந்தார். சிறந்த முன்கள வீரரான இவர், தனது மந்திர ஆட்டத்தால் 1928, 1932, 1936ல் இந்திய அணி தொடர்ந்து ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல கைகொடுத்தார். ஹாக்கி வரலாற்றில் அதிக கோல் (570, 185 போட்டியில்) அடித்து சாதனை படைத்தார். 'ஹாக்கி மந்திரவாதி' என போற்றப்பட்ட இவர்,  74வது வயதில் (1979, டிச.3) காலமானார்.இவரது பெயரில் இந்திய விளையாட்டின் உயர்ந்த 'தயான் சந்த் கேல் ரத்னா விருது’ வழங்கப்படுகிறது. பிறந்த நாளான ஆக. 29, தேசிய விளையாட்டு தினமாக கடை பிடிக்கப்படு கிறது. இவருக்கு 1956ல் 'பத்ம பூஷண்' விருது வழங்கப்பட்டது."ஒலிம்பிக் கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் ஹாக்கியில் தான் கிடைத்தது. இதற்கு தயான் சந்த் முக்கிய காரணம் .இந்திய விளையாட்டுக்கு இவர் செய்த சேவைக்கு அங்கீகாரமாக பாரத ரத்னா விருது வழங்க வேண்டு மென அனைத்து ஹாக்கி நட்சத்திரங்கள் சார்பில் அரசை கேட்டுக் கொள்கிறேன்,"என்றார் அரங் திலிப் டிர்கே.

1 2 ... 35 36 37 38 39 40 41 ... 96 97

AD's



More News