இந்திய வீரர் அபய் சிங் ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வென்று ரூ.11 லட்சம் பரிசு பெற்றார்.
இந்திய அணி சென்னையில் நடந்த உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியில், ஹாங்காங்கை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது. அந்த அணியில் அங்கம் வகித்த அபய் சிங் சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் படித்து வருகிறார். குருநானக் கல்லூரியில் உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்கு வகித்த அபய்சிங்குக்கு பாராட்டு விழாவில் ,அபய் சிங்குக்கு ரூ.11 லட்சம் ரொக்கப்பரிசை கல்லூரி தாளாளர் மஞ்சித் சிங்நய்யார் வழங்கினார். அத்துடன் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம்வென்ற வீரர்களுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகையாக அளிக்கப்பட்டது. விழாவில் அபய் சிங்கின் பெற்றோர் ,துணைத் தலைவர் ஜஸ்பீர்சிங் நருலா, முதல்வர் எழிலரசி, விளையாட்டுஒருங்கிணைப்பாளர் நமச்சிவாயம், கலந்து கொண்டனர்.
0
Leave a Reply