25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


விளையாட்டு (SPORTS)

Sep 04, 2025

இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் புனே வெற்றி .

இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் இந்தியாவில், நேற்று, விசாகப்பட்டனத்தில் நடந்த லீக் போட்டியில் புனே, பெங்கால் அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் புனே அணி 26-22 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியிலும் புனே வீரர்கள், பெங்கால் அணியினரை 'ஆல்-அவுட்' செய்து முடிவில் புனே அணி 45-36 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதலிரண்டு போட்டியில் பெங்களூரு, குஜராத் அணிகளை வீழ்த்திய புனே அணி  வெற்றியை பதிவு செய்தது. புனே அணிக்கு அஸ்லாம் இனாம்தர் (11 புள்ளி), ஆதித்யா ஷிண்டே (11) கைகொடுத்தனர். பெங்கால் அணி சார்பில் கேப்டன் தேவங்க் 17 புள்ளி பெற்றார்.

Sep 04, 2025

இந்திய நட்சத்திரங்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கின்றனர்.

முதன் முறையாக உலக சாம்பியன்ஷிப் தொடர் உலக குத்துச்சண்டை அமைப்பு சார்பில் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் இன்று துவங்கும் .இத்தொடரில் ஒரே நேரத்தில் ஆண்கள், பெண்கள் பிரிவில் போட்டி நடக்க உள்ளன.65 நாடுகளில் இருந்து, பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 17 பேர் உட்பட, 550 நட்சத்திரங் கள் பங்கேற்க உள்ளனர்.இம்முறை இந்தியா சார்பில் ஆண்கள் (10), பெண்கள் (10) என மொத்தம் 20 பேர் பங்கேற்கின்றனர். 

Sep 04, 2025

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரி ல் 12வது சீசன் இந்தியா-தென் கொரியா 'டிரா' .

 பீஹாரில் ஆசியகோப்பைஹாக்கிதொடரின் 12வதுசீசன் பீஹாரில்இந்தியா,'நடப்பு சாம்பியன்' தென்கொரியா, மலேசியா, கஜகஸ்தான் உட்பட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.'ஏ' பிரிவில் இந்தியா, சீனா, 'பி' பிரிவில் மலேசியா, நடப்பு சாம்பியன் தென்கொரியா அணிகள் முதல் இரு இடம் பிடித்து 'சூப்பர்–4’ சுற்றுக்கு முன்னேறின.நேற்று 'சூப்பர்-4' போட்டிகள் துவங்கின. உலகத் தரவரிசையில் 7வது இடத்திலுள்ள இந்திய அணி, 14வது இடத்திலுள்ள தென் கொரியாவை சந்தித்தது. முடிவில் போட்டி 2-2 என்ற கணக்கில் 'டிரா' ஆனது. 

Sep 04, 2025

ஆசிய அமெச்சூர் செஸ் சாம்பியன்ஷிப்.

ஆசிய அமெச்சூர் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஹாங்காங்கில் பெண்களுக்கான 'ரேபிட்' பிரிவில் இந்தியா சார்பில் பிரிஸ்டி முகர்ஜீ, பிரதிக்சா, தியா, தீபிஹா உட்பட மொத்தம் 58 பேர் பங்கேற்றனர். பங்கேற்ற 8 சுற்றிலும் பிரிஸ்டி வெற்றி பெற்று 8.0 புள்ளி பெற்றார். இதையடுத்து ஒரு சுற்று மீதமுள்ள நிலையில் 1.5 புள்ளி வித்தியாசத்தில் முந்திய பிரிஸ்டி, முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனார்.கிரிஸ்டி 5.5 புள்ளியுடன் (5 வெற்றி, 3 'டிரா', 2 தோல்வி)  கிளாசிக்கல் பிரிவில், மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வசப்படுத்தினார். பெண்களுக்கான மற்றொரு கிளாசிக்கல் பிரிவில், இந்தியாவின் தியா சவுத்ரி பங்கேற்றார்.இவர், மொத்தம் 6.0 புள்ளிஎடுத்து மூன்றாவது இடம் பிடிக்க, வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 

Sep 03, 2025

இத்தாலியின் ஜானிக் சின்னர் யு.எஸ்.ஓபன் காலிறுதியில் …..

யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் உலகின் 'நம்பர் -1' வீரர், இத்தாலியின் ஜானிக் சின்னர், 23வது இடத்திலுள்ள கஜகஸ்தானின் அலெக் சாண்டர் பப்ளிக்கை சந்தித்தார். முதல் செட்டை 6-1 என வென்ற சின்னர், அடுத்த இரு செட்டையும் 6–1, 6–1 என எளிதாக கைப்பற்றினார். மூன்றாவது முறையாகஇத்தொடரில் ஒரு மணி நேரம் 23 நிமி டம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் சின்னர், 6–1, 6–1, 6–1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.அமெரிக்காவின் 45 வயது வீனஸ்வில்லியம்ஸ்,கன டாவின் லேலா ஜோடி, பெண்கள்இரட்டையர் மூன்றாவது சுற்றில் 6-3, 6-4 என ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரோவா, சீனாவின் ஷுவாய் ஜங் ஜோடியை வென்று கால் இறுதிக்கு முன்னேறியது. இந்தியாவின் யூகி பாம்ப்ரி, ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் ,ஆஸ்திரேலியாவின் மைக்கேல் வீனஸ் ஜோடி, ஈகுவடாரின் எஸ்கோபர், மெக்சிகோவின் ரேய்ஸ் வரேலா ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி நேரம், 26 நிமிடம் நடந்த போட்டியில் காலிறுதிக்கு முந்தையசுற்றுக்குள் பாம்ப்ரி ஜோடி 6-1, 7-5 என வெற்றி பெற்று, நுழைந்தது. 

Sep 03, 2025

விளையாட்டு போட்டிகள் . 3rd SEPTEMBER 2025

இன்று 'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடர்உஸ்பெகிஸ்தானில் துவங்குகிறது. இதில் 'டாப்-2' இடம் பெறும் வீரர், வீராங்கனைகள், 2026ல் நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங் கேற்க தகுதி பெறலாம். இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ், பிரக்ஞானந்தா உட்பட 10 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் வைஷாலி, ஹரிகா, வந்திகா விளையாட உள்ளனர்.செப். 7ல் டில்லியில் தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் தொடர், 13 ஆண்டுக்குப் பின் துவங்குகிறது. நடப்பு தேசிய சாம்பியன் தியா, காமன்வெல்த்தில்தங்கம் வென்ற சத்யன், ஹர்மீத் தேசாய் உட்பட மொத்தம் 2958 பேர் பங்கேற்கின்றனர். டில்லியின் மணிகா பத்ரா, சர்வதேச அட்டவணை காரணமாக இதில் பங்கேற்கவில்லை.இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட்போர்டு 'ஸ்பான்சர்' ஒப்பந்தத்தில் இருந்து 'டிரீம் லெவன்' விலகியது. விண்ணப்பங்களை சமர்பிக்க செப். 16, கடைசி தேதியாக,  அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய 'ஸ்பான்சர்' ஏல அறிவிப்பு வெளியானது.இந்தியா சார்பில் 'சீனியர்' பிரிவில் பங்கேற்ற நிஷா, சம்ருதி,ஹங்கேரியின் புடாபெஸ்டில் ரிதமிக் ஜிம்னாஸ்டிக் 6,7வது இடம் பிடித்தனர் .

Sep 03, 2025

புஜைரா குளோபல் செஸ்  ஐக்கிய அரபு எமிரேட்சில்முதலிடம் பிடித்து, ரூ. 20.27 லட்சம் பரிசு பெற்றார். பிரனவ் சாம்பியன் .

புஜைரா குளோபல் செஸ்  ஐக்கிய அரபு எமிரேட்சில்70நாடுகளின் 530 நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இந்தியாவின் பிரனவ், பிரனேஷ், நிஹால் சரின் உட்பட44 பேர்சூப்பர் ஸ்டார்ஸ் பிரிவில் களமிறங்கினர்.இதில், தமிழகத்தை சேர்ந்த பிரனவ், கடந்த ஆண்டு (2024) நடந்த சென்னை செஸ் தொடரில் சாலஞ்சர் பிரிவில் கோப்பை வென்றிருந்தார்.இம்முறை மாஸ்டர்ஸ் பிரிவில் பிரனவ் வெங்கடேஷ், 9வது இடம் பெற்றார்.ஜூனியர் உலக சாம்பியன் ஆன 18 வயது பிரனவ்  குளோபல் தொடரில் துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்டார். 9வது, கடைசி சுற்றில் ஸ்பெயினின் ஆலன் பிஷோட்சை சந்தித்தார். போட்டியின் 54 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து 9 சுற்றில் ஒன்றில் கூட தோற்காத பிரனவ், 7.0 புள்ளியுடன் (5 வெற்றி, 4 'டிரா') முதலிடம் பிடித்து கோப்பை வென்றார். இவருக்கு ரூ. 20.27 லட்சம் பரிசு கிடைத்தது. 

Sep 02, 2025

ஜோகோவிச் ஒரு சீசனின்  யு.எஸ்., ஓபன்: 4 கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் காலிறுதிக்கு முன்னேறிய மூத்த வீரரானார்.

யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜெர்மனியின்ஜான்லெனார்டு ஸ்டிரப் மோதினர். போட்டியின் போது கழுத்து, வலது தோள்பட்டைபகுதியில் ஏற்பட்ட வலிக்கு முதலுதவி எடுத்துக் கொண்ட ஜோகோவிச் 6-3, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். கிராண்ட் ஸ்லாம் அரங்கில் 64வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார். தவிர இவர், ஒரு சீசனின் 4 கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் காலிறுதிக்கு முன்னேறிய மூத்த வீரரானார்.உலகின் 'நம்பர்-1' பெலா ரசின் அரினா சபலென்கா, ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சா  பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் மோதினர்.இதில் 6-1, 6-4 சபலென்கா என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-1, 6-2 என, சகவீராங்கனை ஆன்லியை மற்ற 4வது சுற்று போட்டிகளில் வீழ்த்தினார். செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா 1–6, 7–6, 6-3 என, அமெரிக்காவின் டெய்லர்டவுன்சென்ட்டை தோற்கடித்தார். 

Sep 02, 2025

ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்தியா கோல் மழை பொழிந்தது .

ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன் பீஹாரின் ராஜ்கிர் நகரில், இந்தியா, தென் கொரியா உள்ளிட்ட 8 அணிகள் 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்றன.'ஏ' பிரிவில் சீனா, ஜப்பானை வீழ்த்திய இந்தியா, ஏற்கனவே 'சூப்பர்-4' சுற்றுக்குள் நுழைந்தது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதி, இந்தியா 15-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

Sep 02, 2025

சர்வ தேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) பெண்கள் உலக கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.40 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது.

 ஐ.சி.சி.,  உலக கோப்பை (50 ஓவர்) இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ,13வது சீசன் (செப். 30 - நவ.2) நடக்க வுள்ளது. இதில் இந்தியா, 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின் றன. 'ரவுண்டு-ராபின்' முறையில் ,ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் சுற்றில்விளையாடும்.முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல்நான்குஇடம்பிடிக்கும்அணிகள்அரையிறுதிக்கு(அக் 29,30) முன்னேறும்.பைனல், நவ.2ல்நடக்கவுள்ளது.இத்தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அறிவித்தது. இதில் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 40 கோடி வழங்கப்படும்.

1 2 ... 34 35 36 37 38 39 40 ... 96 97

AD's



More News