கிராண்ட் செஸ் டூர் 10வது சீசனில் ஒரு பகு தியான சின்க்யுபீல்டு கோப்பை தொடர் அமெரிக்காவின் செயின்ட் லூயிசில், இதன் 9வது சுற்றில் இந்தியாவின் பிரக் ஞானந்தா அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் மோதினர். விறுவிறுப்பான இப்போட்டி 32வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. பிரக்ஞானந்தா (1.0 புள்ளி) 2வது இடத்தையும், குகேஷ் (4.0) 8வது இடத்தையும் கைப்பற்றினார்.செஸ் டூர் பைனலுக்கு கிராண்ட் (செப். 26-அக்.4 இடம் : சாவ் பாலோ, பிரேசில்) தமிழகத்தின் பிரக்ஞானந்தா தகுதி பெற்றார்.
ஆண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன் பீஹாரின் ராஜ்கிர் நகரில், இந்தியா, 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா, மலேசியா, கஜகஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. 'சூப்பர்-4' சுற்றுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள், முன்னேறும். இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாடும். முடிவில் 'டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள், வரும் செப். 7ல் நடக்கவுள்ள பைனலில் மோதும்.இதில் வெற்றி பெறும் அணி, அடுத்த ஆண்டு பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கவுள்ள உலக கோப்பைக்கு (ஆக. 14-30) நேரடியாக தகுதி பெறும். இந்திய அணி, தொடரை வெற்றியுடன் துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில், ஆண்களுக்கான தனிநபர் 25 மீ., 'ஸ்டேன்டர்டு பிஸ்டல்' பிரிவு பைனலில் இந்தி யாவின் குர்பிரீத் 572.18 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் அமன்பிரீத் சிங் (572.11 புள்ளி) வெள்ளிப்பதக்கத்தைவென்றார்.ஆண்கள் அணிகளுக்கான 25 மீ., 'ஸ்டேன்டர்டு பிஸ்டல்' பிரிவில் குர்பிரீத் சிங் (572.18), அமன்பிரீத் சிங் (572.11), ஹர்ஷ் குப்தா (565.13) அடங்கிய இந்திய அணி, 1709.42 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றது.தனிநபர் 25 மீ., 'ஸ்டேன்டர்டு பிஸ்டல்' ஆண்கள் அணிகளுக்கான பிரிவில் இந்தியாவின் சூரஜ் சர்மா (571.12 புள்ளி), தனிஷ்க் நாயுடு (568.11) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். சூரஜ் சர்மா (571.12 புள்ளி), தனிஷ்க் நாயுடு (568.11), முகேஷ் (564.16) அடங்கிய இந்திய அணி, 1703.39 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் கைப்பற்றியது.50 மீ., 'ரைபிள் புரோன்' ஜூனியர் ஆண்கள்அணிகளுக்கான பிரிவில் சமி உல்லா கான் (617.0), அட்ரியன் கர் மாகர் (614.5),குஷாக்ரா சிங் ரஜாவத் (612.8) அடங்கிய இந்திய அணி, 1844.3 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வென்றது.இந்தியாவுக்கு இதுவரைஇத்தொடரில் 44 தங்கம், 20 வெள்ளி, 18 வெண்கலம் என, 82 பதக்கம் கிடைத்துள்ளது.
தேசிய ஸ்குவாஷ் சாம்பியன் ஷிப் 81வது சீசன் டில்லியில், ஆண்களுக்கான பைனலில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார், அபய் சிங் மோதினர். வேலவன் 3-1 (11-8, 11-9, 4-11, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக (2023, 2025) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய அபய் சிங், 2வது இடம் பிடித்தார்.டில்லியின் அனாஹத் சிங், கோவாவின் அகன்ஷா சலுங்கே பெண்களுக்கான பைனலில், மோதினர். அனாஹத் 3-0 (11-7, 11-6, 11-4) என வெற்றி பெற்று, தொடர்ந்து 3வது முறையாக (2023-25) கோப்பை வென்றார்
காமன்வெல்த் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், ஆண்களுக்கான 71கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அஜித் நாராயணா 26, (தமிழகம்) பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 145, 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 172 என, மொத்தம் 317 கிலோ பளுதுாக்கிய அஜித், புதிய காமன் வெல்த் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார். நைஜீரியாவின் ஜோசப்எடிடியாங் உமோ பியா (316 கிலோ) வெள்ளி வென்றார். இந்தியாவின் நிருபமா தேவி செரம்,பெண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற 'ஸ்னாட்ச்' பிரிவில் 91, 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 126 என, மொத்தம் 217 கிலோ பளுதுாக்கி 2வது இடம் பிடித்து, வெள்ளி வென்றார்.இந்தியாவின் ஹேமந்தா டோய்மாரி ஜூனியர் ஆண்களுக்கான 71 கிலோ எடைப் பிரிவில் (264 கிலோ, 'ஸ்னாட்ச்' 118, 'கிளீன் அண்டு ஜெர்க்' 146) தங்கம் வென்றார்.
17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் பூடானில், 7வது சீசன் ,இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என 4 அணிகள்பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும்.முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, கோப்பை வெல்லும்.முதல் 3 போட்டியில் நேபாளம், வங்கதேசம், பூடானை வென்றது இந்தியா. நேற்று இரண்டாவது கட்ட போட்டி, இந்திய அணி, மீண்டும் பூடானை எதிர் கொண்டது. முடிவில் இந்திய அணி 5-0 என தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்தது. இந்தியா 12 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது .
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பி யன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில், , 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் ,ஆண்களுக்கான தனிநபர் 25 மீ இந்தியாவின் ஆதர்ஷ் சிங் (585.20 புள்ளி), அனிஷ் பன்வாலா (583.21) முறையே 2, 4வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். பைனலில் அனிஷ் 35 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். மற்றொரு இந்திய வீரர் ஆதர்ஷ், 15 புள்ளிகளுடன் 5வது இடத்தை கைப்பற்றினார். சீனாவின் சு லியான்போபான் (36 புள்ளி) தங்கம் வென்றார். இது வரை 9 தங்கம் உட்பட 23 பதக்கம் சீனியர் பிரிவில் வென்ற இந்தியா, 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா (15 தங்கம், 27 பதக்கம்) .
இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ,அதிக டெஸ்ட் விக்கெட் சாய்த்த இரண்டாவது இந்திய பவுலரான அஷ்வின் (537), கடந்த டிசம்பர் மாதம் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.பிரிமியர் அரங்கில் 2009ல் சென்னை அணிக்காக களமிறங்கினார். 2010, 2011ல் கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றார். 2016ல் புனே, 2018-2019ல் பஞ்சாப், 2020-2021ல் டில்லி, 2022-2024ல் ராஜஸ்தான் என ஐந்து அணிகளில் விளையாடினார்.பிரிமியர்அரங்கில்ஒருவீரராகஎனதுபயணம்முடிவுக்கு வந்துவிட்டது.ஆனால்மற்றநாடுகளில்நடக்கும்உள்ளூர் 'டி-20' லீக்கில் பங்கேற்கும் எனது பயணம் துவங்குகிறது என தெரிவித்துள்ளார்.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது கஜகஸ்தானில், 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவில் இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா (589), ஆஷி சவுக்சே (586), அஞ்சும் மவுத்கில் (578) கூட்டணி, மொத்தம் 1753 புள்ளி எடுத்து முதலிடம் பெற்று தங்கம் வென்றார். 8 பேர் . பங்கேற்ற தனிநபர் பைனலில் சிப்ட் கவுர் சம்ரா, 459.2 புள்ளி எடுத்து முதலிடம் பெற்று, தங்கம் கைப்பற்றினார். ஜூனியர் அணிகள் பிரிவில் 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் இந்தியாவின் பிராச்சி (588), மஹித் (587), அனுஷ்கா (583) கூட்டணி தங்கம் (1758 புள்ளி) வென்றது. தனி நபர் பிரிவில் இந்தியாவின் அனுஷ்கா, 460.7 புள்ளியுடன் தங்கப்பதக்கம் வென்றார். இந்திய வீரர் ஆண்களுக்கான 'டிராப்' ஜூனியர் பைனலில் ஆர்யா வன்ஷ், கஜகஸ்தானின் நிகிடா, சமபுள்ளி (40) பெற்று முதலிடம் பெற்றனர். 'ஷூட் ஆப்பில்' ஆர்யாவுக்கு, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்தியாவின் சபீரா, டிராப்' ஜூனியர் பெண்களுக்கான பைனலில் ,39 புள்ளி எடுத்து தங்கம் கைப்பற்றினார்.இந்திய வீராங்கனை ஆத்யா (38) வெள்ளி வென்றார். 25 மீ., ரேபிட் பயர் பிஸ்டல் - ஜூனியர் பிரிவில் இந்திய வீரர்சமீர் (21) வெண்கலம் வென்றார்.
காமன் வெல்த் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் ஆமதாபாத்தில் ,30 நாடுகளில்இருந்து 291 நட்சத்திரங்கள் பங்கேற் கின்றனர். 53 கிலோ யூத் பிரிவில் இந்தியாவின் 17 வயது வீராங்கனை கோயல் பார் பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 85 கிலோ எடை தாக்கினார்.அடுத்து 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 107 கிலோ துாக்கினார். மொத்தம் 192 எடை தூக்கிய கோயல் , புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றார். இந்தியாவின் பிந்தியாராணி 58 கிலோ பிரிவில் மொத்தம் 206 கிலோ (91+115) எடை தூக்கி, இரண்டாவது இடம் பெற, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்தியாவின் சாந்தா (185 கிலோ) ஜூனியர் 58 கிலோ பிரிவில் தங்கம் கைப்பற்றினார்.இந்திய வீரர் அனிக் மோடி, ஜூனியர் 65 கிலோ பிரிவில் 238 கிலோ (103+135) துாக்கிதங்கம் வென்றார். ஜூனி யர் பிரிவில் (65 கிலோ) யாஷ் கந்தகலே (273) தங்கம் கைப்பற்றினார். இந்தியாவின் ராஜ முத்துபாண்டி (தமிழகம்),ஆண்கள் 65 கிலோ பிரிவில் 'ஸ்னாட்ச்' 128 பிரிவில்128 கிலோ, கிளின் அண்டு ஜெர்க்' பிரிவில் 168 கிலோ என மொத்தம் 296 கிலோ தூக்கி, வெள்ளி வென்றார்.