ஐரோப்பிய ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் தொடர் சுவீடனில் கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் தியா சிட்டாலே, மனுஷ்ஷா ஜோடி, சிங்கப்பூரில் பங் கோயன், ஜெங் ஜியன் ஜோடியை சந்தித்தது. முதல் இரு செட்டை இந்திய ஜோடி 11-8, 11-7 என வசப்படுத்தியது. அடுத்த செட்டை 8-11 என இழந்தது. நான்காவது செட்டை 12-10 என போராடி வென்றது. முடிவில் இந்திய ஜோடி 3-1 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. ஸ்வியாடெக் ஜோடி யு.எஸ்., ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம். யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் அமெரிக்காவின் நியூயார்க்கில், டென்னிஸ் தொடர் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகள் புதிய முறையில் நடக்கிறது. ஒரு செட்டை கைப் பற்ற, 4 'கேம்' வென்றால் போதும்.இதன் காலிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், நார்வேயின் காஸ்பர் ரூட் ஜோடி, அமெரிக்காவின் கேட்டி மெக்னலி, இத்தாலியின் லோரென்சோ முசெட்டி ஜோடியை சந்தித்தது. ஸ்வியாடெக், ரூட் ஜோடி 4-1, 4-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில் 10 மீ., ஏர் பிஸ்டல் அணிகளுக்கான போட்டி நடந்தது. இந்தியா சார்பில் மனு பாகர், சுருச்சி, பாலக் குலியா இடம் பெற்ற அணி பங்கேற்றது.மொத்தம் 1730 புள்ளி எடுத்து, வெண்கலம் வென்றது. சீனா (1740), தென் கொரிகயா (1731) தங்கம், வெள்ளி வென்றன. தனிநபர் பெண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் போட்டி ,தகுதிச்சுற்றில் மனுபாகர் 583 புள்ளியுடன் இரண்டாவது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார். ஈஷா சிங் 9 (577), சுருச்சி 10 (574), பாலக் 13வது (573) இடம் பெற்று வெளியேறினர். பைனலில் கடைசி நேரத்தில் சறுக்கிய மனு பாகர், 219.7 புள்ளியுடன் 3வது இடம் பெற, வெண்கல பதக்கம் கிடைத்தது. ஆசிய சாம்பியன் ஷிப்பில் மனு பாகர் வென்ற 10வது பதக்கம் .ஜூனியர் பிரிவில் இந்தியாவின் ராஷ்மிகா (ஏர் பிஸ்டல்) தங்கம் வென்றார். அணிகளுக்கான பிரிவில் ராஷ்மிகா, வன்ஷிகா, மோகினி இடம் பெற்ற இந்திய அணி தங்கம் வென்றது.
சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடர் அமெரிக்காவில் உலக சாம்பியன் குகேஷ், பிரக்ஞானந்தா என இருவர் உட்பட மொத்தம் 10 பேர் இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர். முதல் சுற்றில் குகேஷ், பிரக்ஞானந்தாவை சந்தித்தார்.பிரக்ஞானந்தா, துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார். போட்டியின் 36 வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார் சர்வதேச செஸ் லைவ் தரவரிசையில், 5 புள்ளி கூடுதலாக பெற்ற பிரக்ஞானந்தா (மொத்தம் 2784.0) ஒரு இடம் முன்னேறி, உலகின் 'நம்பர்-3' வீரர் ஆனார்
பெண்களுக்கான 13வது உலக கோப்பை தொடர் (50 ஓவர், செப். 30-நவ. 2) இந்தியா, இலங்கையில் நடக்க உள்ளது. இந்தியா, ‘நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர், துணைக் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா தொடர்கின் றனர்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை '14-20' கிரிக்கெட் தொடர் (செப். 9-28) நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணித் தேர்வு நேற்று மும்பையில் நடந்தது. தேர்வுக்குழு தலைவர் அகார்கர் பங்கேற்றார். 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப் பட்டது. சூர்யகுமார் யாதவ் கேப்டன். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்க பட்டார்.
ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் சின் சினாட்டி ,பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் போலந்தின் ஸ்வியாடெக் (உலகின் 'நம்பர் -3'), இத்தாலியின் பாவோலினி ('நம்பர்-7' மோதினர்.முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார் ஸ்வியாடெக். தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-4 என வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 50 நிமிடம் நடந்த போட் டியின் முடிவில் ஸ்வியாடெக், 7-5, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, முதன் முறையாக கோப்பை கைப்பற்றினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-1', இத்தாலியின் சின்னர், 'நம்பர்-2', ஸ்பெயினின் அல்காரஸ் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டில் அல்காரஸ் 5-0 என முன் னிலையில் இருந்தார்.உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட சின்னர், போட்டியில் இருந்து விலகியதால் அல்காரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட, கோப்பை வென்றார்.
ஏ.டி. பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ரித்விக் ஜோடி அமெரிக்காவின் பாட்ரிக், ரியான் எதிர் ஜோடியை கொண்டது.ஒரு மணி நேரம்,23 நிமிடம் நடந்த போட்டி யின் முடிவில் இந்திய ஜோடி 4-6, 6-7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பெற்றது.
டைமண்ட் லீக் போட்டி உலக தடகள கூட்டமைப்பு சார்பில் ,16வது சீசன் தற்போது நடக்கிறது. உலகின் 12 இடங்களில் 2025ல் இதுவரைபோட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட்ட 'டாப்-6' நட்சத்திரங்கள், டைமண்ட் லீக் பைனலில், பங்கேற்க தகுதி பெறலாம். எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 2025ல் இரு தொடரில் மட்டும் பங்கேற்றார். கத்தாரில் முதன் முதலாக 90 மீ., துாரத்துக்கும் (90.23 மீ.,) மேல் எறிந்து இரண்டாவது இடம் (7 புள்ளி) பிடித்தார். பாரிசில் 88.16 மீ.,துாரம் எறிந்து, முதலிடம் (8 புள்ளி) பிடித்தார். இரு தொடரில் மொத்தம் 15 புள்ளி பெற்ற நீரஜ் சோப்ரா, தற்போது பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.
கஜகஸ்தானில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் , ஆண்கள் அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் அன்மோல் ஜெயின் (580 புள்ளி), ஆதித்யா மல்ரா (579), சவுரப் சவுத்தரி (576) அடங்கிய இந்திய அணி, 1735 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் ஜூனியர் ஆண்கள் தனிநபர் ,இந்தியாவின் ஜோனாதன் கவின் அந்தோணி (582.20 புள்ளி), முகேஷ் (582.18), கபில் (579.15) முறையே 2,3,4வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர் அடுத்த நடந்த பைனலில் கபில், 243.0 புள்ளிகளுடன் தங்கத்தை வென்றார்.
சர்வதேச டேபிள் டென்னிஸ் சார்பில் ' யூத்' கன்டெண்டர் தொடர், ஜோர்டானில் இந்தியாவின் அனன்யா, அன்கோலிகா 15 வயது பெண்களுக்கான பைனலில் மோதினர். இதில் அனன்யா 3-0 என (11-8, 11-1, 11-3) நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இந்தியாவின் ஹர்குன்வர் சிங், குஷால் ஆண்களுக்கான (19 வயது) பைனலில் ஹர்குன்வர் சிங் 3-1 என்ற செட் கணக்கில் (8-11, 11-8, 11-6, 11-4) வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.இந்தியாவின் வைஷ்ணவி, திவ்யான்ஷி 17 வயது பெண்களுக்கான பைனலில் மோதினர். இதில் திவ்யான்ஷி, 3-0 என (11-5, 11-3, 11-4) வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.இந்தியாவின் திவ்யான்ஷி, அதர்வா ஜோடி 15 வயது கலப்பு இரட்டையரில் 3-0 என ஈரானின் நிஹால், அல் தஹேர் ஜோடியை வென்று சாம்பியன் ஆனது.திவ்யான்ஷி, 2-3 என ஈரானின் செடயேசிடம் தோற்று, 19 வயது பிரிவு பைனலில் இரண்டாவது இடம் பிடித்தார்.இந்தியாவின் சித்தாந்த் (15 வயது), அபிநந்த் (17 வயது), பெண்கள்பிரிவில்அனன்யா(17 வயது), ஷிரியா, வைஷ்ணவி (19 வயது) ஆண்கள் பிரிவில் 3வது இடம் பிடித்தனர்.