ஜெருசலேம்கிராண்ட்ஸ்லாம்தடகளபோட்டிஇஸ்ரேலில், பெண்களுக்கான2000 மீ.,'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தில் பங்கேற்றஇந்தியாவின் அங்கிதா தியானி23,,பந்தய துாரத்தை 6 நிமிடம், 13.92 வினாடியில் கடந்த அன்கிதா முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்று இலக்கை அதி வேகமாக கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார்.அன்கிதா தியானி உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். பாரிஸ் ஒலிம்பிக் (2024) 5000 மீ., ஓட்டத்தில் பங்கேற்ற இவர், ஆசிய சாம்பியன் ஷிப் (2023, வெண்கலம், 5000 மீ.,),ஆசிய உள்ளரங்கு சாம்பியன்ஷிப் (2024, வெள்ளி 3000 மீ.,), உலக பல்கலை., விளையாட்டில் (2025, வெள்ளி, 3000 மீ., 'ஸ்டீ பிள்சேஸ்') பதக்கம் வென்றுள்ளார்.
கிராண்ட் பிரிக்ஸ் தடகளபோட்டி ஹங்கேரியில், ஆண்களுக்கான 'போல் வால்ட்' போட்டியில் ஒலிம்பிக்கில் இரண்டு முறை(2020,2024) தங்கம் வென்ற சுவீடனின் டுப்ளான்டிஸ் 25,பங்கேற்றார். கடந்த ஜூன்மாதம் சொந்தமண்ணில் நடந்த போட்டியில் 6.28 மீ., உயரம் தாவி உலகசாதனை படைத்திருந்தார். நேற்று பைனலில் பங்கேற்ற டுப்ளான்டிஸ், அதி கபட்சமாக 6.29 மீ., உயரம் தாவி,13வதுமுறையாக தனது சொந்த உலக சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்து புதிய உலக சாதனை படைத்தார்..ஆண்களுக்கான 3000மீ., ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் பங்கேற்று,7 நிமிடம்,34.49 வினாடியில் வந்து 5வது இடம் பிடித்து, தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார். இதற்கு முன், கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் நடந்த போட்டியில் இவர், 7 நிமிடம், 38.26 வினாடியில் கடந்து தேசிய சாதனை படைத்துள்ளார்.
இந்திய பெண்கள் 'ஏ' அணி ஆஸ்திரேலியா சென்று, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று பிரிஸ்பேனில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய 'ஏ' அணி தஹ்லியா, பேட்டிங் தேர்வு செய்தார் ஆஸ்திரேலிய ஏ அணி 47.5 ஓவரில் 214 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய ஏ அணி 215/7 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. தொடரில் இந்தியா ஏ 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி நாளை பிரிஸ்பேனில் நடக்க உள்ளது.
ஆக. 25-31ல் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பிரான்ஸ் தலைநகர் பாரிசில், தொடர் அட்டவணை வெளியானது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென்,முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-1' சீனாவின் ஷி யூ கியை எதிர் கொள்கிறார்.சர்வதேச அரங்கில் சீன வீரருக்கு எதிராக விளையாடிய 4 போட்டியில், ஒன்றில் மட்டும் லக்சயா வெற்றி பெற்றுள்ளார்.முதல் சுற்றில் பின்லாந்தின் ஜோகிம்மை சந்திக்கும் மற்றொரு இந்திய வீரர் பிரனாய், 2வது சுற்றில் உலகின் 'நம்பர்-2' டென்மார்க்கின் ஆன்டர்ஸ் ஆண்டர்சனை எதிர்கொள்ள நேரிடும். பெண்கள் ஒற்றையரில் களமிறங்கும் சிந்து,3வது சுற்று வரை எளிதாகமுன்னேறிவிடலாம்.
நேற்று 7 வது சுற்று போட்டி சென்னையில், கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் ,மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன், நெதர்லாந்தின்அனிஷ் கிரி மோதினர். இப்போட்டி 35வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இந்தியாவின் நிஹால் சரின், அமெரிக்காவின் ராய் ராப்சனை சந்தித்தார். நிஹால், 43 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். தமிழகத்தின் சென்னையை சேர்ந்த ரோகித் கிருஷ்ணா 20 , இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டர் ஆனார்.கடந்த மார்ச் மாதம் சுவீடனில் நடந்த கிராண்ட் மாஸ்டர் தொடரில் 9 சுற்றில் 6.5 புள்ளி எடுத்தார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான முதல் அந்தஸ்தை எட்டினார். அடுத்து துபாய் ஓபன் தொடரில் 9 சுற்றில் 5.5 புள்ளி எடுக்க, இரண்டாவது அந்தஸ்தை அடைந்தார்.கஜகஸ்தானில் அல்மாட்டியில் மண்டல ஓபன் சர்வ தேச செஸ் தொடரில் பங்கேற்ற, ரோகித் கிருஷ்ணா கடைசி சுற்றில் (9 வது) ஆர்மேனியா வின் ஆர்தர் தவ்த் யனை வென்றார்.6.0 புள்ளி எடுத்து 8வது இடம் பிடித்தார். தவிர, 'பிடே' தரவரிசையில் 15.1 புள்ளி பெற்றார். இதையடுத்து சர்வதேச தரவரிசையில் மொத்தம் 2500 புள்ளிகள் என்ற மைல்கல்லை எட்ட, மூன்றாவது அந்தஸ்தை அடைந்தார். தற்போது இந்தியாவின் 89 வது கிராண்ட் மாஸ்டர் ஆனார்.இந்தியாவின் ஆதித்யா, இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு 9 சுற்றில் 5 வெற்றி, 5 'டிரா' செய்து, 6.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனார்.
12வது சீசன்உலக விளையாட்டு சீனாவில் ,இந்தியா சார்பில் 17 பேர்(10 வீரர்,7 வீராங்கனை), வில்வித்தை, பில்லியர்ட்ஸ், ராக்கெட்பால், ஸ்பீடு ஸ்கேட்டிங், உஷு என 5 வகையான விளையாட்டில் பங்கேற்கின்றனர்.இந்தியாவின் நம்ரதா பத்ரா, பெண்களுக்கான உஷூ போட்டி,'சாண்டா'52 கி.கி., பிரிவில், பைனலுக்கு முன்னேறினார். நேற்று நடந்த பைனலில், நம்ரதா, சீனாவின் மெங்யூ செனை சந்தித்தார். இதில் நம்ரதா 0/2 என தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதையடுத்து உலக விளையாட்டு உஷூ போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம் என சாதனை படைத்தார்.ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி யில், ஆண்களுக்கான அரையிறுதி முதல் 'ஹீட்டில்' இந்தியாவின் ஆர்யன்பால், 34.849 புள்ளியுடன் நான்காவது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.
கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் சென்னையில், சாலஞ்சர்ஸ் பிரிவில் 10 இந்திய நட்சத்திரங்கள் விளையாடுகின்றனர்.நேற்று ஆறாவது சுற்று போட்டிகள் நடந்தன. இதில் ஹரிகாவைஷாலி மோதினர். ஹரிகா,80வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.மற்றொரு போட்டியில் அபிமன்யு புரானிக், பிரனேஷை சந்தித்தார். தொடர்ச்சியாக 4 வெற்றி பெற்ற அபிமன்யு, இம்முறை46வது நகர்த்தலில் தோல்வி யடைந்தார். அதிபன்பாஸ்கரன், திப்தயனை வென்றார். 4.5 புள்ளியுடன் பிரனேஷ் முதலிடத்துக்கு முன்னேறினார். அபிமன்யு (4.5 புள்ளி, 4 வெற்றி, 1 தோல்வி, 1 'டிரா') அடுத்து உள்ளார். இந்தியாவின் அர்ஜூன், மாஸ்டர்ஸ் பிரிவில், ஜெர்மனியின் வின்சென்ட்டை எதிர் கொண்டார்.
இந்தியாவின் உலக பாரா 'எலைட்' டேபிள் டென்னிஸ் தொடர்அமெரிக்காவின் வாஷிங்டனில் பெண்கள் ஒற்றையரில் பவினா பென் படேல், அரையிறுதியில் பிரிட்டனின் மேஹன் ஷாக்லெட்டனை 30 எனவென்றார். அடுத்து நடந்த பைனலில் பவினா பென், இஸ்ரேலின் கரோலினை சந்தித்தார்.முதல் செட்டை பவினா 11-4 ,2 வது செட்டில் 11-4 , மூன்றாவது செட்டில் பவினா, 11-5 என வென்றார். முடிவில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.இந்தியாவின் பவினா பென், சுபம் ஜோடி, கலப்பு இரட்டையர் பிரிவு லீக் போட்டியில், பிரேசிலின் பிராகா, சுலோவாகியாவின் போரிஸ் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 3-0 என (12-10, 11-8, 11-9) வெற்றி பெற்றது.
உலக விளையாட்டு 12வது சீசன்சீனாவில் நடக்கிறது. இந்தியா சார்பில் 17 பேர்(10 வீரர்,7 வீராங்கனை), வில்வித்தை, பில்லியர்ட்ஸ், ராக்கெட் பால், ஸ்பீடு ஸ்கேட்டிங், உஷு என 5 வகையான விளையாட்டில் பங்கேற்கின்றனர்.பெண்கள் உஷூ போட்டிக்கான 'சாண்டா'52 கி.கி., பிரிவு அரை யிறுதியில் இந்தியாவின் நம்ரதா பத்ரா, பிலிப்பைன்சின் கிரிசான் பெய்த் கொலாடோ மோதினர். இதில் நம்ரதா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். இம்முறை இந்தியாவுக்கு 2வது பதக்கத்தை உறுதி செய்தார். நம்ரதா, சீனாவின் மெங்யூ சென் இன்று நடக்கும் பைனலில் மோதுகின்றனர்.
துாரந்த் கோப்பை கால்பந்துஇந்தியாவில், 134வது சீசன் நடக்கிறது. மொத்தம் 24 அணிகள்,6 பிரிவுகளாக லீக் சுற்றில்விளையாடுகின்றன.'சி' பிரிவு லீக் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்த போட்டியில் இந்திய ராணுவம், லடாக் அணிகள் மோதின. இந்திய ராணுவ அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.