பீட்ரூட் இடியாப்பம் .
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 2 கப்,
பீட்ரூட் சாறு - அரை கப்,
கொதி நீர் - 2-3 கப்,
உப்பு - தேவையான அளவு .
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு எடுத்து அதில் உப்பு கலந்து கொள்ளவும்.கொதி நீரை சிறிது சிறிதாக ஊற்றி, மாவை கிளறவும்.
இடை இடையே பீட்ரூட் சாறை ஊற்றி மாவை கிளறவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றியதும் மாவு வெந்துவிடும். எல்லா மாவையும் ஒன்றாக திரட்டி கொள்ளவும்.தேவையான சிறிது மாவு எடுத்து இடியாப்ப அச்சில் போட்டு, இட்லி குழியில் பிழியவும்3-4 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.பீட்ரூட் இடியாப்பம் ரெடி. குழம்பு அல்லது தேங்காய் பாலுடன் பரிமாறவும்.
0
Leave a Reply