தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் ரூ.2.38 கோடி மதிப்பில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் சேமிப்பு கிடங்கு கட்டும் பணிகளுக்கு அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம், கங்காகுளத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் ரூ.2.38 கோடி மதிப்பில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் சேமிப்பு கிடங்கு கட்டும் பணிகளுக்கு திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன் அவர்கள், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் (19.12.2025) அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கங்காகுளம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக புதிதாக அமைக்கப்படவுள்ள இந்த கிட்டங்கியினை அமைப்பது என்பது, தமிழ்நாடு அரசினுடைய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் எந்தளவிற்கு ஒரு முறையான கட்டமைப்பினை தமிழ்நாடு எங்கும் உருவாக்குவதற்கும் குடிமைப் பொருட்களை பாதுகாத்து அதை உரிய மக்களுக்கு சென்று சேர்வதில், எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் இருப்பதற்கும் இன்றைக்கு சிறப்பான முறையில் உருவாக்கி வருகிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் 26 இடங்களில் உருவாக்கப்படக்கூடிய இந்த கிட்டங்கிகள் நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி கங்காபுரத்திலும், திருச்சுழி தமிழ்பாடியிலும் என இரண்டும் சேர்த்து சுமார் ரூ.6 கோடி மதிப்பில் இந்த கட்டிடங்களை நுகர்பொருள் வாணிப கழகம் உருவாக்கயிருக்கிறது. இதற்காக நபார்டு வங்கியினை நிதியுதவியை பெற்றிருக்கிறோம்.
பொதுவாக நம்முடைய உணவு பொருட்கள் வழங்கல் துறை என்பது எந்தளவிற்கு மிக கவனமாக செயல்படக்கூடிய ஒரு துறை. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய பிறகு, இன்றைக்கு நெல் விளைச்சல் என்பது குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அமோகமாக இருக்கிறது. எனவே நெல் கொள்முதல் நிலையங்களை அந்த அளவிற்கு வேகமாக அதிக அளவில் கொண்டு வருகின்றோமோ அப்படி கொள்முதல் செய்யப்படக்கூடிய நெல்லை நாம் பாதுகாத்து வைக்கக்கூடிய வகையில் அவற்றிற்கான கிட்டங்கி, கிடங்கு வசதிகளை அரசு பெரிய அளவில் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் நம்முடைய நுகர்பொருள் வாணிபக் கழகமும் தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொண்டிருக்க கூடிய இத்தகைய குடிமைப் பொருட்களுக்கு, அந்த குடிமைப் பொருட்களை பாதுகாப்பான முறையிலே வைத்திருந்து, அதை கெட்டுப் போகாமலோ, வேற எந்த விதமான குறைபாடுகளும் வந்து விடாமல் வைப்பதற்கு அவர்களுக்கான புதிய வசதிகளை உருவாக்கி தந்திட வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் அவர்கள் 2024-25 சட்டமன்றத்தில் அறிவிப்புகளை வெளியிட்டு இன்றைக்கு தமிழ்நாடெங்கும் இத்தகைய புதிய அமைப்புகள் உருவாக்கப்பட இருக்கின்றது.அதில் ஒன்று சிவகாசி கங்காகுளத்தில் வருவது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. எனவே அந்த நிகழ்ச்சிகளை பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
பொதுவாக இந்த அடிக்கல் நாட்டுவது என்பது ஒருபுறம் இருந்தாலும், அது மக்களுக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கூடிய அளவில் மிக விரைவில் அதற்கான காலகட்டத்திற்குள் அந்த பணிகளை துறையும், ஒப்பந்ததாரர்களும் இணைந்து பணியாற்றி தரமான முறையில் அதனை நிறைவேற்றி உரிய காலத்திற்குள் பணிகளை முடித்து அதற்கான பயன்பாட்டிற்கு கொண்டு வருவதிலும் முனைப்பு காட்ட வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply