25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ராகி இடியாப்பம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராகி இடியாப்பம்.

தேவையான பொருட்கள்:

2கப் ராகி மாவு - 2கப்,

தண்ணீர்- 2கப்,

2ஸ்பூன் எண்ணெய்- 2ஸ்பூன்,

உப்பு- தேவையானஅளவு,

தேங்காய் துருவல் - தேவையான அளவு, 

சர்க்கரை- தேவையான அளவு.

செய்முறை:

1கப் மாவுக்கு 1கப் தண்ணீர் தான் அளவு.முதலில் காடாயில்,2கப் தண்ணீர் சேர்த்து, அதில் தேவையான அளவு உப்பு மற்றும் 2ஸ்பூன் எண்ணெய் கலந்து விட்டு நன்றாக கொதிக்க விடவும்.கொதித்ததும்,அடுப்பை சிறு தீக்கு மாற்றி,மாவு சேர்த்து கிளறவும்.முதலில் தண்ணீர் போதாதது போல் தோன்றும். கிளற கிளற சரியாகிவிடும்.

திருப்தியாக இல்லையெனில்,1-2ஸ்பூன் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.2நிமிடங்களில் மாவு வெந்து திரண்டு வந்துவிடும்.அடுப்பை அணைத்து,2-3நிமிடங்கள் மூடி போட்டு வைக்கவும்.பின் இளஞ்சூடாக இருக்கும் போது,சூடு பொறுக்க கையில் சிறிதளவு தண்ணீர் நனைத்துக் கொண்டு 1நிமிடத்திற்குப் பிசைந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

பின் இட்லி குக்கரில்,2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கும் நேரத்தில்,இடியாப்ப அச்சில் ஒவ்வொரு உருண்டைகளாக வைத்து பிழிந்து கொள்ளவும்.பின்,குக்கரில் வைத்து15 நிமிடங்கள் வேக வைக்கவும்.ஆறியதும் இதனுடன் தேங்காய் துருவல் மற்றும் நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.வேக வைக்கும் போது,தேங்காய் துருவல் சேர்த்தும் வேக விடலாம்.சுவையான, ராகி இடியாப்பம் ரெடி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News