22 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் தாய்லாந்தில்,பெண்களுக்கான 80+ கி. கி. எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் ரித்திகா 4-1 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அசெல்டோக்டாசினை வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்தியாவின் யாத்ரி படேல் பெண்களுக்கான 57 கி.கி., பிரிவு பைனலில் 2-3 என, உஸ்பெகிஸ்தானின் குமோரபோனு மாமஜோனோவாவிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.மற்றொரு பைனலில் (60 கி.கி.,) இந்தியாவின் பிரியா 2-3 என சீனாவின் யூ டியானிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்தியாவின் நீரஜ் ஆண்களுக்கான 75 கி.கி., பிரிவு பைனலில் உஸ்பெகிஸ்தானின் ஷவ்கட்ஜோன் போல்டேவிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார். மற்றொரு பைனலில் (90+ கி.கி.,) இந்தியாவின் இஷான் கடாரியா, உஸ்பெகிஸ்தானின் கலிம்ஜோன் மாமாசோலியேவிடம் வீழ்ந்தார்.22 வயதுகுட்பட்டோர் பிரிவில் ஒரு தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்ற இந்தியா 4வது இடம் பிடித்தது. இதன் 19 வயதுகுட்பட்டோர் பிரிவில் இந்தியாவுக்கு 3 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என, 14 பதக்கங்கள் கிடைத்திருந்ததன.
ஆசிய ரக்பி செவன்ஸ் சாம்பியன்ஷிப் (20 வயதுக்குட்பட்ட) தொடர் பீஹாரில் ,லீக் சுற்றில் இந்திய பெண்கள் அணி 'டி' பிரிவில் இடம் பெற்றது. லீக் சுற்றில் இந்திய பெண்கள் அணி (7 புள்ளி) அரையிறுதிக்கு முன்னேறியது. 'சீ' பிரிவில் முதலிடம் பெற்ற சீனாவை எதிர் கொண்டது. இதில் 7-28 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது.இந்தியா, உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இதில் 12-5 என வெற்றி பெற்ற இந்திய பெண்கள் அணி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. 'ஏ' பிரிவில் இந்திய ஆண்கள் அணி லீக் சுற்றில் (3ல் 1 வெற்றி, 2 தோல்வி, 5 புள்ளி) 3வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தது. 5-6வது இடத்துக்கான போட்டியில் 19-24 என கஜகஸ்தானிடம் தோற்று, 6வது இடம் பிடித்தது.
பெண்களுக்கான 13வது உலக கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் (50 ஓவர், செப்.30-நவ.2) நடக்க உள்ளது. இந்தியா, ‘ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் (செப்.30) இந்திய அணி, இலங்கை பங்கேற்கிறது. உலக கோப்பைக்கு முன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளோம். இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், தன்னம்பிக்கை அதிகரிக்கும். "இந்திய வீராங்கனைகளின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அணியும் கடின பயிற்சியின் அவசியத்தை உணர்ந்துள்ளோம். உலக கோப்பை போட்டிக்கு சிறப்பான முறையில் தயாராகி வருவதாக, மந்தனா கூறினார்.
மாமல்லபுரம் கடற்கரையில், ஆசிய 'சர்பிங்' (அலைச்சறுக்கு) சாம்பியன் ஷிப் போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான ஓபன் பிரிவு பைனலில்.நேற்று இந்தியாவின் ரமேஷ் புதிஹல் பங்கேற்றார்.இதில் 12.60 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த ரமேஷ், வெண்கலம் வென்றார். இதன் மூலம் ஆசிய அலைச்சறுக்கு போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.
நேஷனல் சூப்பர் கிராஸ் சாம்பியன்ஷிப்,எம்.ஆர்.எப்., நிறுவனத்தின் 'எம்.ஆர்.எப்., ரேசிங், காட் ஸ்பீடு' சார்பில், , 2025க்கான இரண்டாம் சுற்று, பைக் ரேஸ், கோவை, கொடிசியா மைதானத்தில் நடந்தது. 'டர்ட் ரேஸ்' எனப்படும் இந்த பந்தயத்தில், ஆங்காங்கே மண் மேடுகள் அமைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 65 வீரர்கள், ஏழு வீராங்கனைகள், ஆறு சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர். 'மோட்டோ கிராஸ் ஓபன் கேட்டகிரி', 10 வயதுக்கு உட்பட்டோர், 15 வயதுக்கு உட்பட்டோர் என, எட்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில், வீரர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.வீரர்கள் மண் மேடுகளை தாண்டி விண்ணில் 'பறந்து' சாகசம் புரிந்தனர். ஒவ்வொரு போட்டிக்கும், ஒன்பது சுற்றுகள் வீதம் நிர்ணயிக்கப்பட்ட சூழலில், அரங்கத்தில் நிறைந்திருந்த பார்வை யாளர்களை பரவசப்படுத் தியது.'முதல் சுற்று புனேவிலும், இரண்டாம் சுற்று கோவையிலும் முடிந்த நிலையில், அடுத்த சுற்றுப் போட்டி குஜராத்தில் நடத் தப்படும். போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அடுத்தடுத்து, ஆறு சுற்றுகள் நடத்தப் பட்டு, புள்ளிகள் அடிப்படையில் தேசிய சாம்பியன் அறிவிக்கப்படுவார்' என கூறினர்.
நேற்று உலக தடகள கான்டினென்டல் டூர் போட்டிஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ,உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான (செப் 13-21, டோக் கியோ) தகுதிச் சுற்றாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.இந்தியாவின் அன்னு ராணி, பெண்களுக்கான ஈட்டி எறிதலில் , 4வது வாய்ப்பில் அதிகபட்சமாக 62.01 மீ., எறிந்து முதலிடம் பிடித்தார். அடுத்த இரு இடங்களை இலங்கையின் தில்ஹானி (56.27 மீ.,), இந்தியாவின் தீபிகா (54.20 மீ.,) கைப்பற்றினர். இந்தியாவின் ஷிவம் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் ,(80.73 மீ.,) 2வது இடம் பிடித்தார். இந்தியாவின் ரோகித் யாதவ் (80.35 மீ.,), சச்சின் யாதவ் (79.80 மீ.,),யாஷ்விர் சிங் (78.53 மீ.,) முறையே 4, 5, 6வது இடம் பிடித்தனர். இந்தியாவின் விஷால் ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் பைனலில், (45.72 வினாடி), அமோஜ் ஜேக்கப் (45.86), சந்தோஷ் குமார் (46.89 வினாடி, தமிழகம்) முதல் மூன்று இடம் பிடித்தனர்.இந்தியாவின் அபினயா பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் பைனலில் (11.57 வினாடி), ஸ்னேகா (11.70), நித்யா காதே (11.70) முதல் மூன்று இடம் பிடித்தனர்.மலேசியாவின் ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் பைனலில் முகமது அசீம் (10.35 வினாடி) முதலிடம் பெற்றார். இந்தியாவின் லாலு பிரசாத் போய் (10.54 வினாடி), ராகுல் குமார் (10.59, தமிழகம்) முறையே 4, 6வது இடம் பிடித்தனர். தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தின் நந்தினி பெண்களுக்கான 100மீ., (13.80 வினாடி) 2வது இடம் பிடித்தார். ஒடிசா வீராங்கனை பிரக்யான் பிரசாந்தி சாஹ் (13.74) முதலிடத்தை கைப்பற்றினார்.இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் அதிகபட் சமாக 8.13 மீ., தாண்டி முதலிடத்தை கைப்பற்றினார். அடுத்து இரு இடங்களை ஷாந்வாஸ் கான் (8.04 மீ.,), லோகேஷ் சத்யநாதன் (7.85 மீ.,) பிடித்தனர்.இந்தியாவின் அனிமேஷ் ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில் இலக்கை 20.77 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். தமிழகத்தின் ராகுல் குமார் (21.17) 3வது இடத்தை கைப்பற்றினார். .
'கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடர் சென்னையில். மாஸ்டர்ஸ் (10), சாலஞ்சர்ஸ் (10) என இரு பிரிவு களில் மொத்தம் 20 பேர் பங்கேற்கின் றனர். சாலஞ்சர்ஸ் பிரிவில் வைஷாலி, ஹரிகா என இரு வீராங்கனைகள், 8 வீரர்கள் என 10 இந்திய நட்சத்திரங்கள் விளையாடுகின்றனர். நேற்று இரண்டாவது சுற்று நடந்தன.ஹரிகா, இனியனை சந்தித்தார். சமீபத்திய உலக கோப்பை தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய ஹரிகா, நேற்று. இவர், 39 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். போட்டியில் அபிமன்யு, மெடோன்காவை வென்றார். வைஷாலி -அதிபன் பாஸ்கரன், பிரனேஷ் - திப்தயன், ஹர்ஷவர் தன் -ஆர்யன் மோதிய போட் டிகள் 'டிரா' ஆகின. இரண்டு சுற்று முடிவில் அபிமன்யு, பிரனேஷ், திப்தயன், இனியன், தலா 1.5 புள்ளியுடன் 'டாப்-4' இடத்தில் உள்ளனர்.
இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பைனலில் இத்தொடரின் ‘நம்பர்-5', உலகத் தரவரிசையில் 126வது இடத்திலுள்ள இந்தியாவின் தான்விகன்னா, இத்தொடரின் 'நம்பர்-1' வீராங்கனை (உலகத் தரவரிசை 94) எகிப்தின் நுார் ககபியை எதிர்கொண்டார்.'இதன் முதல் செட்டை 3-11 என இழந்த தான்வி, 2 வதுசெட்டை 11-5 என கைப்பற்றினார். மூன்றாவது செட் 5-11,. நான்காவது செட்டில் போராடிய போதும், 10-12 என பறிபோனது. போட்டியின் முடிவில் தான்வி, 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பிடித்தார்.எகிப்து வீரர்கள் முகமது கோஹர், யாசின் ஷோடி ஆண்கள் ஒற்றையர் பைனலில் மோதினர். யாசின் 3-0 என (11-5, 11-7, 11-3) நேர் செட்டில் வென்று சாம்பியன் ஆனார்.
ஆசிய கோப்பை பெண்களுக்கான (20 வயதுக்குட்பட்ட) (தாய்லாந்து), உலக கோப்பை (போலந்து) கால்பந்து தொடர்கள் அடுத்த ஆண்டு நடக்க உள்ளன. இதற்கான தகுதிச்சுற்று மியான்மரில் நடக்கிறது. மொத்தம் 33 அணிகள்& பிரிவுகளாகபிரிக்கப்பட்டுள்ளன.இந்தியபெண்கள்அணி 'டி' பிரிவில், மியான்மர், இந்தோனேஷியா, துர்க்மெனிஸ்தா னுடன் இடம் பெற்றுள்ளது.இதில், இந்தியா - இந்தோனேஷியா மோதிய முதல் போட்டி 'டிரா' (0-0) ஆனது. நேற்று தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி, துர்க் மெனிஸ்தானை சந்தித்தது. முடிவில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் இந்தியா (4) முதல் இடத்துக்கு முன்னேறியது. கடைசி போட்டியில் (ஆக. 10) மியான்மரை சந்திக்கிறது. இதில் வென்றால் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறலாம்.
கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும்பெண்கள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு('பிபா') வெளியிட்டது. இதில் இந்திய அணி 70வது இடத்தில் இருந்து 63வது இடத்துக்கு முன்னேறியது. சமீபத்தில் தாய்லாந்தில் நடந்த ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில் மங்கோலியா (13-0), திமோர் -லெஸ்தே (4-0), ஈராக் (5-0), தாய்லாந்து(2/1) அணிகளை வீழ்த்திய இந்திய அணி, முதன்முறையாக தகுதிச்சுற்றின் மூலம் ஆசிய கோப்பைக்கான இடத்தை உறுதி செய்தது. இதன்மூலம் தர வரிசையிலும் முன்னேற்றம் கண்டது இந்தியா. 'யூரோ' கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் 'நம்பர்-1' 'யூரோ' கோப்பைகால்பந்து தொடரில்சுவிட்சர்லாந்தில் பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்த நடப்பு உலக சாம்பியன் ஸ்பெயின் அணி, முதலிடத்துக்கு முன்னேறியது. அமெரிக்க அணி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது.தொடர்ந்து 2வது முறையாக 'யூரோ' கோப்பை வென்ற இங்கிலாந்து,4வது இடத்துக்கு முன்னேறியது. சுவீடன் அணி 'நம்பர்-3' இடத்தை கைப்பற்றியது.