இந்திய ஜோடி டேபிள் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முன்னேறியது. ஸ்வியாடெக் ஜோடி யு.எஸ்., ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்.
ஐரோப்பிய ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் தொடர் சுவீடனில் கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் தியா சிட்டாலே, மனுஷ்ஷா ஜோடி, சிங்கப்பூரில் பங் கோயன், ஜெங் ஜியன் ஜோடியை சந்தித்தது.
முதல் இரு செட்டை இந்திய ஜோடி 11-8, 11-7 என வசப்படுத்தியது. அடுத்த செட்டை 8-11 என இழந்தது. நான்காவது செட்டை 12-10 என போராடி வென்றது. முடிவில் இந்திய ஜோடி 3-1 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
ஸ்வியாடெக் ஜோடி யு.எஸ்., ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்.
யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் அமெரிக்காவின் நியூயார்க்கில், டென்னிஸ் தொடர் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகள் புதிய முறையில் நடக்கிறது. ஒரு செட்டை கைப் பற்ற, 4 'கேம்' வென்றால் போதும்.
இதன் காலிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், நார்வேயின் காஸ்பர் ரூட் ஜோடி, அமெரிக்காவின் கேட்டி மெக்னலி, இத்தாலியின் லோரென்சோ முசெட்டி ஜோடியை சந்தித்தது. ஸ்வியாடெக், ரூட் ஜோடி 4-1, 4-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
0
Leave a Reply