25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Mar 14, 2026

இந்திய அணி உலக கோப்பை ஹாக்கி தகுதி சுற்றின் பைனலுக்கு முன்னேறியது.

பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி 16வது சீசன் பெல்ஜியம், நெதர்லாந்தில் வரும் ஆக. 14-30ல் நடக்கவுள்ளது. இதற்கானதகுதி சுற்று ஐதராபாத்தில் மொத்தம் 8 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. ஒவ்வொருபிரிவிலும் முதலிரண்டு இடம் பிடித்த இங்கிலாந்து (ஏ1), இத்தாலி (ஏ2), இந்தியா (பி1), ஸ்காட்லாந்து (பி2) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்தியா, இத்தாலி அணிகள் நேற்று நடந்த அரையிறுதியில் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இந்திய அணிக்குகிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் மணிஷா சவுகான் ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது.  

Mar 14, 2026

உலக பாரா சாலஞ்சர் டேபிள் டென்னிஸ் தொடரில்பவினா படேல் தங்கம் வென்றார்.

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் உலக பாரா சாலஞ்சர் டேபிள் டென்னிஸ் தொடர்போலந்தில் ,பெண்கள் ஒற்றையர் 'சி 4-5' பிரிவில் ('வீல் சேர்') இந்தியா சார்பில் ,டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற பவினா படேல் 39, தென் கொரியாவின் ஜங்யங்கை காலிறுதியில்,3-1 (8-11, 11-7, 11-6, 11-9) என வென்றார்.அடுத்து நடந்த அரையிறுதியில் தென் கொரியாவின் மூன் சங்யேவை சந்தித்தார். இதில் பவினா 3-1 என  (11-8, 11-7, 8-11, 11-4) வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார். பைனலில் பவினா, பிரான்சின் புளோரா வாட்டியரை எதிர்கொண்டார். பவினா முதல் செட்டில் 11-6 , அடுத்த செட்டில் 11-5 என கைப்பற்றி, மூன்றாவது செட்டை 11-9 என வென்றார். முடிவில் 3-0 என வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 

Mar 14, 2026

இந்தியா பாரா தடகளத்தில் 75 தங்கம் உட்பட மொத்தம் 208 பதக்கங்களை வென்று , பட்டியலில் முதலிடம் பிடித்தது.

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா தடகள கிராண்ட் பிரீ போட்டி டில்லியில்,ரஷ்யா, எகிப்து, போஸ்னியா உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 257 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.ஆண்களுக்கான நீளம்தாண்டுதல் 'டி 44,64' பிரிவுபோட்டியில்,இந்தியாசார்பில்தமிழகவீரர்சோலைராஜ்தர்மராஜ்,7.05 மீ., தாண்டிமுதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம்வென்றார்.மிட்பாரத்பாய்(6.12) சந்தீப்(5.96) வெள்ளி,வெண்கலப்பதக்கம் வென்றனர். பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் அமிஷா, 10.42 மீ., துாரம் எறிந்து, தங்கப்பதக்கம் வென்றார். மற்ற இந்திய வீராங்கனைகள் தயவந்தி (8.05), ஸ்நேகல் (6.93) வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்றனர்.இந்தியா 75 தங்கம், 69 வெள்ளி, 64 வெண்கலம் என ஒட்டுமொத்தமாக 208 பதக்கம், வென்று, பட்டியலில் முதலிடம் பிடித்தது. 

Mar 14, 2026

உலக குத்துச்சண்டை 'பியூச்சர்ஸ்' கோப்பை தொடரில் பெண்களுக்கான 57 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ராதாமணி லாங்ஜம், வெற்றி பெற்றார்.

உலக குத்துச்சண்டை 'பியூச்சர்ஸ்' கோப்பை (19 வயது)தொடர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், பெண்களுக்கான 57 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ராதாமணி லாங்ஜம், 5-0 என இங்கிலாந்தின் சியோபன் ஹேலியை வென்றார். இந்திய வீராங்கனை குஞ்சன் 5-0 என, (48 கிலோ) அஜர்பைஜானின் குலார் ஹுசேனோவாவை மற்றொரு காலிறுதியில் வென்றார்.இந்திய வீராங்கனைகள் ஜாய் ஸ்ரீ தேவி சிரோம் (54 கிலோ), சந்திரிகா பூஜாரி (51 கிலோ), இந்திய வீரர் அம்பேகர் (50 கிலோ) மற்ற காலிறுதியில் வெற்றிபெற்றனர்.

Mar 13, 2026

இந்தியா பாராதடகள போட்டியில் 54 தங்கம் உட்பட 164 பதக்கம் வென்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

 மாற்றுத்திறனாளிகளுக்கான உலகபாராதடகளகிராண்ட்பிரீபோட்டிடில்லியில்,ரஷ்யா, எகிப்து, போஸ்னியாஉள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 257 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.ஆண்களுக்கான 100 மீ.,வீல் சேர் ரேசிங் ('டி 53', 'டி 54') பிரிவு பைனல் நடந்தது.இந்தியாவின் ரமேஷ் சண்முகம், 15.85 வினாடி நேரத்தில் வந்து முதலிடம்பிடித்து, தங்கப் பதக்கம் வென்றார்.இந்தியாவின் சோலைராஜ் ஜெகனாதன் (17.75 வினாடி, தமிழகம்) ஆண்களுக்கான 100 மீ., ('டி 42, 63') தங்கம் வென்றார்.. ரஷ்யாவின் வலே ரியாவுக்கு (14.83 வினாடி) பார்வைக் குறைபாடு உள்ள பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் ('டி 11,12) தங்கம் கிடைத்தது.இந்தியா இது வரை 54 தங்கம் வென்றது. மொத்தம் 164 பதக்கம் வென்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ரஷ்யா 11 தங்கம் உட்பட 25 பதக்கம் வென்று இரண்டாவதாக உள்ளது. 

Mar 13, 2026

இந்தியா, இத்தாலி பெண்கள் அணிகள் ,உலக கோப்பை ஹாக்கி தகுதிச் சுற்றின் அரையிறுதியில் இன்று மோதுகின்றன.

பெண்களுக்கான , உலக கோப்பை ஹாக்கி 16வது சீசன் பெல்ஜியம், நெதர்லாந்தில், உலக, வரும் ஆக.14-30ல் நடக்கவுள்ளது.ஐதராபாத்தில் இதற்கான தகுதிச் சுற்று, நடக்கிறது. மொத்தம் 8 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2 இடம் பிடித்த இங்கிலாந்து (ஏ1), இத்தாலி (ஏ2), இந்தியா (பி1), ஸ்காட்லாந்து (பி2) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.இன்று நடக்கும் அரையிறுதியில் இந்தியா- இத்தாலி, இங்கிலாந்து - ஸ்காட்லாந்து அணிகள் விளையாடுகின்றன. 

Mar 13, 2026

இந்தியாவின் சாஹில்துஹான், சந்திரிகா பூஜாரி உலக குத்துச்சண்டை 'பியூச்சர்ஸ்' கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேறினர்.

உலக குத்துச்சண்டை 'பியூச்சர்ஸ்' கோப்பை தொடர் தாய்லாந்துதலைநகர் பாங்காக்கில், ஆண்களுக்கான 60 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் சாஹில் துஹான், தஜி கிஸ்தானின் அமீர்பெக் மக்ரமோவ் மோதினர். இதில் சாஹில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.இந்தியாவின் சந்திரிகா பூஜாரி, அமெரிக்காவின் ரூபி லோபஸ் ,பெண்களுக்கான 50 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் மோதினர். இதில் சந்திரிகா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

Mar 13, 2026

பி.சி.சி.ஐ., விருதுக்கு சுப்மன் கில் தேர்வு  .

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்களுக்கான விருது வழங்கப்படும். இதன்படி, கடந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்திய டெஸ்ட், ஒருநாள் போட்டி அணி கேப்டன் சுப்மன் கில் 26, தேர்வு செய்யப்பட்டார்.2025ல் சுப்மன் விளையாடிய 35 போட்டியில், 7 சதம், 3 அரைசதம் உட்பட 1764 ரன் குவித்தார்.முன்னாள் இந்திய கேப்டனும், பயிற்சியாளருமான டிராவிட் 53, சி.கே.நாயுடு வாழ் நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வானார். இந்தியஅணி 2024ல் இவரது பயிற்சியின் கீழ் 2024ல் ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கைப்பற்றியது.

Mar 12, 2026

பிரிமியர் கிரிக்கெட் லீக் தொடருக்கான 19வது சீசன்.

வரும் மார்ச் 28ல் ,பிரிமியர் கிரிக்கெட் லீக் தொடருக்கான 19வது சீசன்துவங்கி ,பைனல் மே 31ல்  நடக்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட அட்டவணை வெளியானது. சட்ட மன்ற தேர்தல் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடக்க இருப்பதால், 20 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டது.பெங்களூருவில் வரும் மார்ச் 28ல் நடக்கும் முதல் போட்டியில், 'நடப்பு சாம்பியன்' பெங்களூரு அணி, ஐதராபாத் அணியை சந்திக்கிறது. சென்னை அணி, தனது முதல் போட்டியில் ராஜஸ்தானை (மார்ச் 30, இடம்: கவுகாத்தி அசாம்) எதிர்கொள்கிறது. சென்னையில் நடக்கும் லீக் போட்டியில் ஏப்.3ல் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.பெங்களூரு, சென்னை அணிகள் ஏப்.5ல் பெங்களூருவில் நடக்கும் போட்டியில் விளையாடு கின்றன. சென்னை அணி, டில்லியை ,ஏப்.11ல் சென்னையில் நடக்கும் போட்டியில் சந்திக்கிறது.

Mar 12, 2026

உலக கோப்பை ஹாக்கி தகுதிச் சுற்றின் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய பெண்கள் அணி

இந்திய பெண்கள் அணி ,உலக கோப்பை ஹாக்கி தகுதிச் சுற்றின், அரையிறுதிக்கு  முன்னேறியது. கடைசி லீக் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் வேல்சை வீழ்த்தியது.வரும் ஆக. 14-30ல் பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி 16வது சீசன் பெல்ஜியம், நெதர்லாந்தில், நடக்கவுள்ளது. ஐதராபாத்தில் நடக்கும் இதற்கான தகுதிச்சுற்று, மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்றன. உலக கோப்பை தொடருக்கு 'டாப்-3' இடம் பிடிக்கும் அணிகள் தகுதி பெறும். இந்திய அணி ''பி" பிரிவில் மூன்றுபோட்டியில், 2 வெற்றி, ஒரு 'டிரா' என, 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. 2வது இடத்தை ஸ்காட்லாந்து (7 புள்ளி) கைப்பற்றியது. இவ்விரு அணிகளும் அரையிறுதிக்குள் நுழைந்தன. 'ஏ' பிரிவில் இங்கிலாந்து (9 புள்ளி), இத்தாலி (4) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.இங்கிலாந்து - ஸ்காட்லாந்து, இந்தியா-இத்தாலி அணிகள் நாளை நடக்கவுள்ள அரையிறுதியில் மோதுகின்றன.

1 2 ... 43 44 45 46 47 48 49 ... 171 172

AD's



More News