கிரிக்கெட் ஐ.சி.சி., தரவரிசை பவுலர்கள் பட்டியலில் முன்னேறிய இந்தியாவின் முகமது சிராஜ்
இங்கிலாந்து பயணத்தை வெற்றிகரமாக முடித்த இந்திய அணியினர் தாயகம் திரும்பினர். இந்திய வேகப்பந்துவீச் சாளர் முகமது சிராஜ் 31, பீல்டிங் பயிற்சியாளர்
திலிப் உடன் லண்டனில் இருந்து மும்பை வந்தார். அங்கிருந்து, தனது சொந்த ஊரான ஐதராபாத் சென்றார் சிராஜ். ஐதராபாத் விமான நிலையத்தில் இந்திய ரசிகர்கள் சிராஜுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்டில் இந்தியாவின் முகமது சிராஜ், இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் (4+5) சாய்த்து, 9 ஆட்ட நாயகன் விருது வென்றார்.இத்தொடரில் 5 போட்டியிலும் விளையாடிய சிராஜ், 1113 பந்துகள், 185.3 ஓவர் வீசி, 23 விக்கெட் கைப்பற்றினார்
இதனிடையே டெஸ்ட் போட்டியில் சிறந்த வீரர்களுக்கான ஐ.சி.சி., தரவரிசை பவுலர்கள் பட்டியலில் (674 புள்ளி), 27வது இடத்தில் இருந்து முதன் முறையாக 15வது இடத்துக்கு முன்னேறினார் இந்தியாவின் சிராஜ்.
0
Leave a Reply