(ஆண்டர்சன் சச்சின் டிராபி) டெஸ்ட் தொடரில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆண்டர்சன் சச்சின் டிராபி) இங்கிலாந்து சென்ற இந்திய அணி பங்கேற்ற,ஐந்தாவது டெஸ்ட் லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இந்தியா 224, இங்கிலாந்து 247 ரன்,. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 396 எடுத்தது. இங்கிலாந்துக்கு 374 ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 367 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. 57 நிமிடங்களில் இங்கிலாந்தின் எஞ்சிய நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய அணி வெற்றியை 2/2 என சமன் செய்தனர் .
கோப்பையைஇரு அணிகளும் பகிர்ந்து கொண்டனர். மொத்தம் 9 விக்கெட்(4+5)வீழ்த்திய சிராஜ், ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இத்தொடரில் அதிக ரன்குவித்த பேட்டர் வரிசையில் இந்திய கேப்டன் சுப்மன் கில் முதலிடம் பிடித்தார். இவர், 5 டெஸ்டில், 4 சதம் உட்பட 754 ரன்எடுத்தார். 'வேகத்தில்' மிரட்டிய முகமது சிராஜ், வெற்றிக்கு கைகொடுத்தார்.
0
Leave a Reply