அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசனில் கோவா அணிமுதலிடம்
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசன் ஆமதாபாத்தில் (குஜராத்), நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் நடப்பு சாம்பியன்' கோவா, புனே அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் கோவா வின் ஹர்மீத் தேசாய், புனேயின் அல்வரோ ரோபிள்ஸ் மோதினர். இதில் ஹர்மீத் 2-1 என வெற்றி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் கிருத்விகா சின்ஹா ராய் (கோவா) 2-1 என ஜியோன் லீயை (புனே) வீழ்த்தினார். கலப்பு இரட்டையர் போட்டியில் கோவாவின் ஹர்மீத் தேசாய், ஜெங் ஜியான் ஜோடி 3-0 என புனே யின் ஜியோ லீ, அனிர்பன் கோஷ் ஜோடியை தோற்கடித்தனர். பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் ஜெங் ஜியான் (கோவா) 2-1 என ரீத் ரிஷ்யாவை (புனே) வென்றார்.கோவா அணி 10-5 என வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 3 போட்டியில், 2ல் வென்ற கோவா அணி 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
0
Leave a Reply