78 வது தேசிய சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசாவின் புவனேஸ்வரில் பெண்களுக்கான 1500 மீ., பிரீஸ்டைல் போட்டியில் டில்லி வீராங்கனை பாவ்யா, 17 நிமிடம்,35.07 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இது புதிய தேசிய சாதனை ஆனது. முன்னதாக 2015ல் மாளவிகா, 17 நிமிடம், 39.16 வினாடியில் கடந்து இருந்தார். பெண்களுக்கான 200 6. பிரீஸ்டைல் கர்நாடகாவின் தினிதி தேசிங்கு, தனது முந்தைய (2:03.24) சாதனையை தகர்த்து, 2 நிமிடம், 02.97 வினாடியில் வந்து தங்கம் வென்றார். டில்லியின் பாவ்யா (2:07.45), மகாராஷ்டிராவின் அதித்தி (2:07.55) அடுத்த இரு இடம் பிடித்தனர். தனிநபர் மெட்லே போட்டியில் ,ஆண்களுக்கான 200 மீ., கர்நாடகாவின் ஷோகன் கங்குலி, 2 நிமிடம், 04.34 வினாடியில் வந்து தங்கம் கைப்பற்றி, புதிய சாதனை படைத்தார்.
கோப்பை செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் மாஸ்டர்ஸ் நகரில் இந்தியாவின் 'நம்பர்-1' வீரர் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். இதன் ஐந்தாவது சுற்றில் அர்ஜுன், உஸ்பெகிஸ் தான் வீரர் சம்சுதீனை சந்தித்தார். அர்ஜுன், போட்டியின் 55 வது நகர்த்தல் முதல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார். 68வது நகர்த்தல் முடிவில் அர்ஜுன் வெற்றி பெற்றார். முடிவில் அர்ஜுன் (4.0) முதலிடத்துக்கு முன்னேறினார். பர்ஹாம் பர் (4.0), நாடிர்பெக் (4.0) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். பிரக்ஞானந்தா (3.0) 5, அரவிந்த் சிதம்பரம் (2.0) 9வது இடத்தில் உள்ளார்.
17 வயதுக்குட்பட்ட நட்சத்திரங்களுக்கான ஆசிய மல்யுத்த சாம்பியன் ஷிப் தொடர் வியட்நாமில் கிரிகோ ரோமன் பிரிவில் போட்டிகள் நடந்தன.110 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் ஹர்தீப் பங்கேற்றார். பைனலில் சீனாவின் சுவான்கி வெய்யை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.48 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ஆதித்ய திலீப், கஜகஸ்தானின் குமாருலி மோதினர். இதில் ஆதித்ய திலீப் 0-8 என்ற கணக்கில் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 60 கிலோ பிரிவில் இந்தியாவின் ரித்தேஷ், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தென் கொரியாவின் ஜியோல்கை 10-0 என வென்றார்.இந்தியாவின் நிதின் (92 கிலோ), காலிறுதியில் 5-6 என கஜகஸ்தான் வீரர் டாய்ஷியிடம் வீழ்ந்தார். அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் 8-2 என சீனாவின் 'யாங் ஜினை சாய்த்தார்.இதுவரை இந்தியா 1 தங்கம், 1 வெண்கலம், 2 வெள்ளி என 4 பதக்கம் வென்றது.
உ.பி.,யின் பிரக்யாராஜில் தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் (20 வயதுக்குட்பட்ட) தொடரின் 23வது சீசன்,.நேற்று நடந்த ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டி நடந்தது. தமிழக வீரர் ரவி, 15.44 மீ., துாரம் தாண்டி தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.பெண்களுக்கான 200 மீ., ஓட்டபைனல் நடந்தது. ஏற்கனவே 400மீ., ஓட் டத்தில் வெள்ளி வென்ற தமிழகத்தின் தேஷிகா கள மிறங்கினார். இம்முறை 24.44 வினாடி நேரத்தில் வந்த தேஷிகா, தங்கம் கைப்பற்றினார். முதல் இரு இடங்கள் பெண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டி யில் தமிழகத்தின் சாதனா (12.75 6.,), பவீனா (12.55 மீ.,) தங்கம், வெள்ளி வசப்படுத்தினர். தமிழகத்தின் பாண்டியன், 21.33 வினாடி நேரத்தில் வந்து, ஆண்களுக்கான 200மீ. ஓட்டத்தில், தங்கப்பதக்கம் வென்றார்.. 400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் திருமலை (54.33) ஐந்தாவது இடம் பிடித்தார். உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் பிரசாந்த் ,ஆண்களுக்கான (2.00 மீ.,) 7வது இடம் பிடித்தார். தமிழக அணி 6 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கம் கைப்பற்றியது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின்(ஐ.ஓ.சி.)தலைவராக 12ஆண்டுகள் பணியாற்றிய ஜெர்மனியைச் சேர்ந்த தாமஸ் பாச்விலகியதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் நீச்சல் வீராங்கனையான (ஜிம் பாப்வே)கிறிஸ்டி கவன்ட்ரி அதிகவாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 131 ஆண்டுகால ஒலிம்பிக் கமிட்டி வரலாற்றில், சர்வதேச விளையாட்டு அமைப்பில் இந்த அரியணையில் அமரும் முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்க நாட்டவர் என்ற பெருமையை 41 வயதான கவன்ட்ரி பெற்றார்.ஐ.ஓ.சி. அமைப்பு உருவாக்கப்பட்ட தினமான(ஜூன்.23), சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக கவுன்ட்ரி முறைப்படி பொறுப்பு ஏற்றுக் கொண்டார். சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நடந்த விழாவில் கோல்டன் சாவியை முன்னாள் தலைவர் தாமஸ் பாச்அவரிடம் வழங்கினார். ஐ.ஓ.சி. சிறந்தவரின் கைக்கு சென்று இருப்பதாகவும்,அவர் நம்பிக்கையுடனும், நேர்மையுடனும் செயல்படுவார் என்றும் தாமஸ் பாச் கூறினார்.
தேசிய ஜூனியர் தடகளம்தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் (20 வயதுக்குட்பட்ட) தொடரின் 23வது சீசன், உ.பி., யின் பிரக்யாராஜில் நேற்று நடந்த ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டத்தில் தமிழக வீரர் யுவராஜ், 13.69 வினாடி நேரத்தில் வந்து தங்கம் கைப்பற்றினார். இது புதிய தேசிய சாதனை ஆனது. முன்னதாக 2021ல் தேஜாஸ் ஷிர்சே (13.74) சாதித்து இருந்தார்.போல் வால்ட் போட்டியில் தமிழகத்தின் கவின் ராஜா (5.11) தங்கம் கைப்பற்றினார்.பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் கிளாடிசியா ஷினே (14.44) வெள்ளி கைப்பற்றினார். ஆண்களுக்கான தாண்டுதலில் நீளம் தமிழக வீரர் ஜித்தின், 7.83 மீ., துாரம் தாண்டி, வெள்ளிப் பதக்கம் வென்றார். பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் தேஷிகா (54.99 வினாடி) வெள்ளிப் பதக்கம் வென்றார்.தேசிய மாஸ்டர்ஸ் ஹாக்கி போட்டி தமிழ்நாடு ஹாக்கி சங்கம் சார்பில் முதலாவது தேசிய மாஸ்டர்ஸ் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆண்கள் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 8-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்பை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. தமிழக அணி தரப்பில் முத்துசெல்வன் 4 கோலும், கேப்டன் ஆடம் சின்கிளைர், சுதர்சன், ரமேஷ், வினோத்குமார் தலா ஒரு கோலும் அடித்தனர். மற்றொரு கால்இறுதியில் ஒடிசா அணி 6-2 என்ற கோல் ஆந்திராவை தோற்கடித்து அரை இறுதிக்குள் நுழைந்தது.பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஒடிசா அணி 3-2 என்ற கோல் கணக்கில் அரியானாவை வீழ்த்தியது. பஞ்சாப் அணி 3-0 என்ற கோல் கணக்கில் தமிழகத்தை தோற்கடித்து, லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் கர்நாடகா, இமாசலபிரதேசம். கேரளா,மராட்டியமும், 'பி' பிரிவில் பஞ்சாப், ஒடிசா, அரியானா, தமிழ்நாடும் முறையே முதல் 4 இடங்களுடன் கால்இறுதிக்குள் நுழைந்தன.இன்று நடைபெறும் ஆண்கள் பிரிவு கால்இறுதி ஆட்டங்களில் மராட்டியம்-கர்நாடகம் (காலை 10 மணி), அரியானா-சண்டிகார் (பகல் 12 மணி) அணிகள் மோதுகின்றன. பெண்கள் பிரிவில் நடக்கும் கால்இறுதி ஆட்டங்களில் கர்நாடகா-தமிழ்நாடு (காலை 6 மணி), ஒடிசா -கேரளா (காலை 8 மணி), இமாசல பிரதேசம்-அரியானா (பிற்பகல் 2 மணி), பஞ்சாப்- மராட்டியம் (மாலை 4 மணி) அணிகள் சந்திக்கின்றன. கால்பந்து ஆஸ்திரேலியாவில்பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின்21வது சீசன்,2026, மார்ச்1,26(12 அணிகள்) நடக்கவுள்ளது. நடப்பு சாம்பியன் சீனா,2,3வது இடம் பிடித்த தென் கொரியா, ஜப்பான், தொடரை ஆஸ்திரேலியா நடத்தும்4 அணிகள் நேரடியாக பங்கேற்க உள்ளன.மீதமுள்ள 8 அணிகளை தேர்வு செய்ய, தகுதிச்சுற்று நடக்கின்றது. 34 அணிகள், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரி விலும் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.இந்திய அணிB பிரிவில் மங்கோலியா, தாய்லாந்து, ஈராக், திமோர்,லெஸ்தே அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. நேற்று முதல் போட்டியில் இந்திய அணி, மங்கோலியாவை சந்தித்து ,இந்திய அணி 13-0 என வெற்றி பெற்றது. தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி 9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட்தொடர் நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப் பர் கிங்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 21-வது லீக் ஆட்டத்தில் ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்து விட்ட முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி கிராண்ட் சோழாசை எதிர்கொண்டது. 'டாஸ்' ஜெயித்த திருச்சி அணியின் கேப்டன் சுரேஷ் குமார் பீல்டிங்கை தேர்வு செய்தார். 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப் பர் கில்லீஸ் அணி 5 விக் கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது .20 ஓவர்களில் திருச்சி அணி 6 விக்கெட்டுக்கு 174 ரன்னில் அடங்கியது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
21-ம் தேதி போட்டி 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ,கோவை கிங்சை சந்தித்தது.நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பீல்டிங்கை தேர்வு செய்து. 20 ஓவர்களில் கோவை அணி 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. நெல்லை அணி 17.5 ஓவர்களில் 98 ரன்னில் சுருண்டது. கோவை அணி 67 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 22-ம் தேதி போட்டி டி.என்.பி.எல்., லீக் போட்டியில், நேற்று மதிய நேரம், சேலம், ‘நடப்பு திண்டுக்கல் சாம்பியன்' அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின், 'பவுலிங்' தேர்வு செய்தார். திண்டுக்கல் அணி 20 ஓவரில் 8 விக்கெட் டுக்கு 192 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி பெற்றதுசேலம் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன் எடுத்தது.. திருப்பூர், மதுரை அணிகள் ,இரவு மற்றொரு லீக் போட்டியில் மோதின. 'டாஸ்' வென்ற திருப்பூர் அணி 'பவுலிங்' தேர்வு செய்தது. திருப்பூர் அணி 10.1 ஓவரில் 124/1 ரன் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுமதுரை அணி 20 ஓவரில், 120 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
சர்வதேச ஹாக்கி புரோ லீக் 6வது சீசன் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஆண்கள் பிரிவில் 8 அணிகள் பங்கேற்கின்றன . இதற்காக பெல்ஜியம் சென்ற இந்திய அணி, தனது கடைசி போட்டியில் பெல்ஜியத்தை மீண்டும் சந்தித்தது. இதில் இந்திய அணி 4-3 என வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக பெல்ஜியம் சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, தனது 14வது போட்டியில் பெல்ஜியத்தை மீண்டும் சந்தித்தது, இதில் இந்திய அணி, 2 வெற்றி, 3 'டிரா', 9 தோல்வி என 10 புள்ளிகளுடன் 9வது இடத்துக்கு தள்ளப்பட்டது தமிழ்நாடு ஹாக்கி முதலாவது தேசிய மாஸ்டர்ஸ் ஹாக்கி போட்டி ,தமிழ்நாடு ஹாக்கி சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 4-வது நாளான நேற்று நடந்த பெண்கள் பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஒடிசாவிடம் வீழ்ந்தது. மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அரியானாவை வீழ்த்தி 2-வது வெற்றி பெற்றது. 5-1 என்ற கோல் கணக்கில் ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் சண்டிகார் அணி மணிப்பூரை தோற்கடித்து 2வது வெற்றியை தனதாக்கியது. ஆந்திராவை மற்றொரு ஆட்டத்தில் ,தமிழக அணி 11-0 என்ற கோல் கணக்கில், 2-வது வெற்றியை பெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பவர்லிப்டிங் உலக கோப்பை தொடர் சீனாவின் பீஜிங்கில், . ஆண்களுக்கான 59 கிலோ பிரிவில் அதிகபட்சமாக 153 கிலோ தூக்கிய இந்தியாவின் குல்பாம் அகமது வெண்கலம் வென்றார். இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம்.ஆண்களுக்கான 72 கிலோ பிரிவில், 156 கிலோ தூக்கிய இந்தியாவின் ராமுபாய் பம்பாவா வெண்கலம் வென்றார்.. ஆண்களுக்கான மாஸ்டர்ஸ் பிரிவில் 150 கிலோ தூக்கிய இந்தியாவின் ஜோபி மாத்யூ தங்கத்தை கைப்பற்றினார்.. இந்தியாவுக்கு நேற்றைய முதல் நாளில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கம் கிடைத்தது.
16வது சீசன் டைமண்ட் லீக் தடகளத்தின் 4வது சுற்று பிரான்சின் பாரிசில் நடந்தது. இந்தியா சார்பில் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இரு பதக்கம் (2021ல் தங்கம், 2024ல் வெள்ளி) வென்ற நீரஜ் சோப்ரா 27, பங்கேற்றார். இவர், முதன் முறையாகதோகா டைமண்ட் லீக் (மே 16) போட்டியில் 90 மீ.,க்கும் (90.23) மேல் எறிந்து இருந்தார். இம்முறை முதல் வாய்ப்பில், அதிக பட்சம் 88.16 மீ., துாரம் எறிந்தார்.. கடைசி, 6வது வாய்ப்பில் 82.89 மீ., துாரம் மட்டும் எறிந்தார். இருப்பினும், நீரஜ் சோப்ரா (88.16) முத லிடம் பிடித்து, பட்டம் கைப்பற்றினார்.