சீனதைபேயில், தைவான் தடகள ஓபன்.
.தைவான் தடகள ஓபன் சீனதைபேயில், நடந்தது. பெண்களுக்கான 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தின் பைனலில், தமிழகத்தின் வித்யா ராம்ராஜ்(56.53 வினாடி) தங்கப்பதக்கத்தை சென்றார். ஆண்களுக்கான 400 மீ.,தடை தாண்டும் ஓட்டத்தின் பைனலில் யாஷஸ் பாலக்ஷா (49.22 வினாடி) வெள்ளி வென்றார்.
இந்தியாவின் பூஜா பெண்களுக்கான 800 மீ., ஓட்டத்தின் பைனலில் - இலக்கை 2 நிமிடம், 02.79 5 வினாடியில் கடந்து, புதிய சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனைடிவிங்கிள் சவுத்தரி (2 நிமி டம், 06.96 வினாடி) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்தியாவின் கிருஷ்ணன்குமார், ஆண்களுக்கான 800 மீ., ஓட்டத்தின் பைனலில் பந்தய துாரத்தை ஒரு நிமிடம், 48.46 வினாடியில் கடந்து, , தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். விஷால், தரம்வீர் சவுத்தரி, சந்தோஷ், மானு அடங்கிய இந்திய அணி ஆண்களுக்கான 4×400 மீ.,தொடர் ஓட்டத்தின் பைனலில் (3 நிமிடம், 05.58 வினாடி) தங்கப்பதக் கத்தை தட்டிச் சென்றது.
0
Leave a Reply