25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


டெஸ்ட் அணி கேப்டனாக சுப்மன் கில்  தேர்வு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டெஸ்ட் அணி கேப்டனாக சுப்மன் கில்  தேர்வு

இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் ஜூன் 20ல் லீட்சில் துவங்குகிறது.இதற்கு முன் நேற்று மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சுப்மன் கில் கூறியது: ஒவ்வொரு தொடரிலும் ஏதாவது ஒரு வகையில் நெருக்கடி இருக்கும்.தற்போது, இந்திய அணிக்காக நீண்ட காலம் சிறப்பாக விளையாடிய, இரு முன்னணி வீரர்கள் இல்லாமல் நாங்கள் களமிறங்குகிறது. அவர்களது இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல. சீனியர்' வீரர்கள் இல்லாமல் விளையாட பழகி வருகிறோம். 

மற்றபடி டெஸ்ட் அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட உடன் திகைத்து விட்டேன். இது மிகப் பெரிய பொறுப்பு. இதற்கான சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். கேப்டன் பணியில் எனக்கென 'ஸ்டைல்' எதுவும் இல்லை. அணியின் மற்ற வீரர்களின் பலம், பலவீனங்களை அவர்களுக்கு தெரிவிக்க முயற்சிப்பேன். அணி யில் தங்களது இடம் பாதுகாப்பான என் பதை அவர்கள் உணர வேண்டும். அப்போது தான் சிறப்பாக செயல்படுவர்.வரும் டெஸ்ட் தொடருக்கான பேட்டிங் ஆர்டர் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இந்திய வீரர்கள் இரு அணியாக பிரிந்து பயிற்சி போட்டியில் பங்கேற்க உள்ளோம்.

அடுத்து 10 நாள் பயிற்சி முகாம் உள்ளது. பவுலிங்கில் 10 வீரர்கள் உள்ளனர். பும்ரா விளையாடினால் சிறப்பாக இருக்கும். அவர் இல்லாத போது, சமாளிக்கத் தேவையான பவுலர்கள் அணியில் உள்ளனர்.கேப்டனாக, மற்ற வீரர் களுக்கு முன்னுதாரணமாக இருக்க முயற்சிப்பேன் என்று சுப்மன் கில் கூறினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News