25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி9-வது சுற்றில் குகேஷ் வெற்றி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி9-வது சுற்றில் குகேஷ் வெற்றி

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடக்கும்ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ்,5முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென்(நார்வே) உள்பட 6 வீரர்கள், பங்கேற்றுள்ளனர். இதில்ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். 

இதன் 9வது சுற்று ஆட்டம் ஒன்றில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய தமிழகத்தை சேர்ந்த குகேஷ் 40வது நகர்த்தலில் சீனாவின் வெய் யியை தோற்கடித்தார். ற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 23-வது நகர்த்தலில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஹிகாருநகமுராவிடம்(அமெரிக்கா) டிரா கண்டார். இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க நடந்த டைபி ரேக்கரில் நகமுரா 48-வது நகர்த்தலில் எரிகைசியை வீழ்த்தினார்.

9வது சுற்று முடிவில் கார்ல்சென் 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும்,குகேஷ் 14% புள்ளிகளுடன் 2வது இடத்திலும், நகமுரா 13 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.கடைசி சுற்றில் குகேஷ், பாபியானோ கருனாவையும், கார்ல்சென், அர்ஜூன் எரிகைசியையும் சந்திக்கிறார்கள். இதன் முடிவில்யாருக்கு சாம்பியன் பட்டம் என்பது தெரியவரும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News