விளையாட்டுபோட்டிகள் .june10th
துப்பாக்கி சுடுதல்.
உலக கோப்பை தொடர் ஜெர்மனியில் இன்று துவங்குகிறது. இதில் இந்தியாவின் இளவேனில், வருண் தோமர், மனு பாகர், ஈஷா சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
கால்பந்து
2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ள ஆசிய கோப்பை கால் பந்து தொடரில் மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றில் 24 அணிகள் பங்கேற்கின்றன. இவை ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதும் போட்டிகள் நடக்கும். புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கலாம்.உலகத் தரவரிசையில் 127வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
கோல் எதுவுமின்றி ,இந்தியா-வங்கதேசம் மோதிய முதல் போட்டி 'டிரா' ஆனது. இன்று ஹாங்காங்கில், நடக்கும் போட்டியில் இந்திய அணி, ஹாங்காங்கை சந்திக்கிறது.
0
Leave a Reply