18வதுசப் - ஜூனியர் சாப்ட் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் தமிழக அணிஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
தேசிய அளவில்,18வது சப் ஜூனியர் சாப்ட் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி, பஞ்சாப், லுாதியானாவில் நடந்தது. ஆண்கள் பிரிவில் தமிழகம் வெண்கலம், பெண்கள் பிரிவில் வெள்ளி வென்றது. தனிநபர் ஒற்றையர் ஆண்கள் பிரிவில் சேலத்தை சேர்ந்த ரிஷி, வேலுார் சாய் அஷ்வின் வெண்கலம் வென்றனர். பெண்கள் பிரிவில் சேலத்தை சேர்ந்த தணிகா தங்கம், வேலுார் ஸ்ரீமதி வெண்கலம் வென்றனர்.
தனி நபர் இரட்டையர் ஆண்கள் பிரிவில், வேலுார் பிருத்விராஜ், கரூர் மதன்பாலாஜி வெள்ளி, சேலம் ரிஷி,அக்ஷித் வெண்கலம்; பெண்கள் பிரிவில் வேலுார் ஸ்ரீமதி, சேலம் ரிஷிகா தங்கம்வென்றனர். சேலம் ஸ்ருதிலயா, கரூர் சஷ் டிகா, வெள்ளிப்பதக்கம் வென்றனர்.கலப்பு இரட்டையரில் வேலுார் ஸ்ரீமதி, சாய் அஷ்வின், வெள்ளி வென்றனர்.சப் ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியில், தமிழக அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
0
Leave a Reply