இந்திய வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங் மாற்றுத்திறனாளிக்கான பாராலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற கூறுகையில்,"பாரா கேலோ இந்தியா விளையாட்டு எங்களது வளர்ச்சிக்கு உதவுகிறது,"என்றார்.
கிரிக்கெட்பி.சி.சி.ஐ., கட்டுப்பாடு - "தொடரின் போது வீரர்களுடன் குடும்பத்தினர் இருப்பது அவசியம் ,இந்திய ஜாம்பவான் கபில்தேவ் கூறுகையில்,. அணியின் நலனும் முக்கியம். சமநிலையை பின்பற்ற வேண்டும்," என்றார்.ஷபாலி'ஒன் டே டிராபி' தொடர் இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் பெண்களுக்கான (23 வயது) தொடர் நடத் தப்படுகிறது. கவுகாத்தியில் நடந்த காலிறுதிக்கு முந்தைய போட்டியில் கர்நாடகா, ஹரியானா மோதின. 'டாஸ்' வென்ற ஹரியானா கேப்டன் ஷபாலி வர்மா, பீல்டிங் தேர்வு செய்தார். ஹரியானா அணி 42 ஓவரில் 219/4 ரன் எடுத்து, 6 விக்கெட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
கால்பந்து: 2027ல்சவுதி அரேபியாவில்ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்று இம் மாதம் நடக்க உள்ளது. மொத்தம் 24அணிகள்,ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு,போட்டிகள் நடக்கும், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலாஇரு முறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கலாம்.உலகத் தரவரிசையில் 126வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி'பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. மார்ச் 25ல்தனது முதல் போட்டியில் 185 வதுஇடத்திலுள்ள வங்கதேசத்தை சந்திக்க உள்ளது.தேசிய பாரா பவர்லிப்டிங்22வது சீனியர், 17வது ஜூனியர் தேசிய பாரா பவர் லிப்டிங் சாம்பின்ஷிப் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் நடந்தது.தமிழகம், குஜராத், ஹரியானா உட்பட 28 நிலத்தின் 280க்கும் மற்பட்ட வீரர், ராங்கனைகள் பங்கேற்றனர்.பெண்களுக்கான சீனியர் 67 கிலோ பிரிவில் தமிழகத்தின் கஸ்தூரி, தங்கம் - அகிலா வெண்கலம் வெ ன்றனர். சீனியர் 86கிலோ பிரிவில் அருண் மொழி தங்கம் கைப்பற் றினார். ஆண்கள் ஜூனியர் 88 கிலோ பிரிவில் மகேஷ்வரன், 72 கிலோ பிரிவில் மனோவா தங்கம் கைப்பற்றினர்.ஹாக்கிதேசிய ஹாக்கி லீக் போட்டி ராஞ்சியில் நடந்த பெண்கள் ஹரியானா அணி, மணிப்பூரை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஒடிசா அணி, பெங்காலை 1-0 என வென்றது.
பெண்களுக்கான கிராண்ட ப்ரி தொடர் சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே) சார்பில் நடக் கிறது. இதன் 4வது கட்ட போட்டிகள் சைப்ரசில் நடக்கின்றன. இந்தியாவின் ஹரிகா துரோணவள்ளி, திவ்யா உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.இந்தியாவின் திவ்யா, ரஷ்யாவின் அலெக்சாண்ட்ராவைஇதன் மூன்றாவது சுற்றில் சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையா டிய திவ்யா, போட்டியின் 41 வது நகர்த்தல் 'டிரா' செய்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹரிகா, சீனாவின் ஜு ஜினரை எதிர்கொண்டார். கருப்புநிற காய்களுடன் ஹரிகா விளையாடினார். இப் போட்டி 41வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.மூன்று சுற்று முடிவில் சீனாவின் ஜூ ஜினர் (2.5 புள்ளி) உள்ளார். முதலிடத்தில் உக்ரைனின் அனா முஜிசுக் (2.0), கிரீ சின் ஸ்டாவ்ரூலா (2.0) அடுத்த இரண்டு இடங் களில் உள்ளனர். இந் தியாவின் ஹரிகா (1.5) 4. திவ்யா (1.5) 7வது இடங்களில் உள்ளனர்.
'சுவிஸ் ஓபன்சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் இன்று துவங்குகிறது. இந்திய நட்சத்திரங்களுக்கு ராசியான இத்தொடரில் இம்முறை பெண்கள் ஒற்றையரில் சிந்து, மாளவிகா, ஆகர்ஷி, ரக்சிதா, அனுபமாநேரடியாக முதல் சுற்றில் களமிறங்குகின்றனர். கடந்த வாரம் ஆல்இங்கிலாந்து பாட்மின்டனில் முதல் சுற்றில் தோல்வியடைந்தார் சிந்து. இம்முறை தனக்கு ராசியான சுவிட்சர்லாந்து மண்ணில் களிமிறங்குகிறார் சிந்து. கடந்த 2019ல் இங்கு உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இவர், 2022ல் சுவிட்சர்லாந்து தொடரில் கோப்பை வென்றார். பெண்கள் இரட்டையரில் திரீசா -காயத்ரி, பிரியா-ஆர்த்தி ஜோடியும், கலப்பு இரட்டையரில் சதிஷ் குமார் - வரியாத் ஜோடியும் திறமை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென், அனுபவ பிரனாய், கிரண் ஜார்ஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, உலகின் 'நம் பர்-1 பெலாரசின் அரினா சபலென்கா மோதினர்.சிறப்பாக ஆடிய ஆன்ட்ரீவா 2-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றார்..
டேபிள் டென்னிஸ்இந்தியாவின் சுதிர்தா, ஸ்வஸ்திகா, தியா, மானுஷ் ஷா, ஸ்னேகித் ஆகியோருக்கு சென்னை 'ஸ்டார் கன்டென்டர்' (மார்ச் 25-30) தொடரில் 'வைல்டு கார்டு' சிறப்பு அனுமதி. டென்னிஸ்இந்தியாவின் ராம் குமார் ஸ்பெயினில் நடக்கும் ஐ.டி.எப்., தொடருக்கான தகுதிச் சுற்று முதல் போட்டியில் 4-6,6-7 என இத்தாலியின் ஜுவாரெசிடம் தோல்வியடைந்தார். கால்பந்து ‘ஐ-லீக்' போட்டி பஞ்சாப்பின் லூதியானாவில் நடந்தது. ‘கேரளா அணி 3-1 என, நாம்தாரி அணியை வீழ்த்தியது. கேரளா அணி (9 வெற்றி, 31 புள்ளி) 4வது இடத்தில் நீடிக்கிறது. அபுதாகிர் பாரா பவர் லிப்டிங் தங்கம் வென்றார் .இந்திய பாரா பவர் லிப்டிங் அமைப்பு சார்பில், உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில், 22வது சீனியர், 17வது ஜூனியர் தேசிய பாரா பவர் லிப்டிங் சாம்பின்ஷிப் நடக்கிறது.இதில் தமிழகம் உட் பட 28 மாநிலத்தை சேர்ந்த, 280க்கும் மேற் பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர், தமிழகம் சார்பில் 30 பேர் விளையாடுகின்றனர்.ஜூனியர் ஆண்களுக்கான 49 கிலோ பிரிவில் தமிழகத்தின் அபுதாகிர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்திய ஹாக்கி நட்சத்திரங்கள் ஹாக்கி இந்தியா அமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது. 1975ல் உலக கோப்பை வென்ற இந்திய ஹாக்கி ஜாம்பவான்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மலேசியாவில் நடந்த உலக கோப்பை பைனலில் (1975, மார்ச் 15) பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, மேஜர் தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது, ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது ஹாக்கி இந்தியா (எச்.ஐ.,) அமைப்பு சார்பில் ஆண்டு தோறும் விருது வழங்கப்படுகிறது. நேற்று டில்லியில் எச்.ஐ., தலைவர் திலிப் டிர்கே தலைமையில் ஏழாவது ஆண்டு விழா நடந்தது. மத்திய விளையாட்டுத் துறை முன்னாள் அமைச்சர் கிரண் ரிஜிஜு, எச்.ஐ., அமைப்பின் பொதுச்செயலர் போலா நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஹாக்கி இந்தியா சிறந்த வீரர், வீராங்கனை விருதுகள்.சிறந்த வீரர் ஹர்மன்பிரீத் சிங் -ரூ.25 லட்சம்சிறந்த வீராங்கனை சவிதா புனியா-ரூ.25 லட்சம்கோல்கீப்பர் சவிதா புனியா- ரூ.5 லட்சம்தற்காப்பு வீரர் அமித் ரோஹிதாஸ் -ரூ.5 லட்சம்'மிட்பீல்டர்' ஹர்திக் சிங்- ரூ.5 லட்சம்முன்கள வீரர் அபிஷேக்- ரூ.5 லட்சம்இளம் வீரர் அராய்ஜீத் சிங்- ரூ.10 லட்சம்இளம் வீராங்கனை தீபிகா குமாரி-ரூ.10 லட்சம்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் 'பிரீஸ்டைல்' செஸ் கிராண்ட்ஸ் லாம் தொடர் முடிவில் அதிக புள்ளி பெற்ற வீரர் சாம்பியன் ஆவார். இதன் இரண்டாவது தொடர் ஏப்.7-14ல் பாரிசில் நடக்க உள்ளது. இதன் 'ரவுண்டு -16' போட்டியில் இந்தியா வின் விதித் குஜ்ராத்தி, முன்னாள் உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரென் மோதினர். இதில் விதித் 1.5-05 என வென்றார். காலிறுதியில் இந்தியாவின் பிரனவ், அரையிறுதியில் ஈரானின் அமினை வீழ்த்தினார். பைனலில் விதித், ஹங் கேரியின் ரிச்சர்டு ராப்போர்ட் மோதினர்.இதில் 1.5-05 என்ற கணக்கில் விதித் பெற்று முதலிடம் பிடித்தார். இவருக்கு ரூ.8.7 லட்சம் பரிசு கிடைத்தது.
24 சுற்றுகளாகநடப்புஆண்டுக்கான 'பார்முலா-1' கார்பந்தயஉலகசாம்பியன்ஷிப்நடத்தப்படுகிறது.முதல்சுற்று, ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்தது. நேற்று,'பைனல் ரேஸ்'' நடந்தது. பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 42 நிமி டம், 06.304 வினாடியில் கடந்த 'மெக்லாரன் மெர்சி டஸ்' அணியின் பிரிட்டன் வீரர் லாண்டோ நோரிஸ், முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பறினார்.