25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


மரக்கன்றுகளை காக்கும் கண்ணாடி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மரக்கன்றுகளை காக்கும் கண்ணாடி

 மரக்கன்றுகள் ஓரளவு வளரும் வரை அவற்றுக்குப் பாதுகாப்பு தேவை. வீட்டுத் தோட்டங்களில், நாம் வேலி அமைத்துக் காக்கிறோம். வீட்டுக்குள்ளே வளரும் செடிகள் என்றால் அவற் றின் மீது கண்ணாடிக் கூண்டை அமைத்தால், நல்ல சூரிய ஒளி கிடைக்கும். இதே முறையைக் காடுகளிலும் பின்பற்றலாம் என்று தாவரவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பசிபிக் கடலில் அமைந்துள்ள குவாம், ரோடா தீவுகளில் மட்டுமே வளரக்கூடிய பெரிய மரம் யாந்தெஸ் நெல்சோனி (Serianthes nelsonii). இது ஓர் அருகிவரும் தாவரம். ரோடா தீவில் 121 மரங்கள் மட்டுமே உள்ளன. குவாம் தீவில் ஒரே ஒரு மரம் தான் உள்ளது. எனவே, இந்த இனத்தைக் காக்க விஞ்ஞானிகள் பெரிதும் முயன்று வருகின்றனர். இதன் கன்றுகளைத் தோட்டங்களில் செயற்கை ஒளியில் வளர்க்கும்போது நன்றாக வளர்கின்றன. ஆனால், வளர்ந்த பின்னர் காடுகளில் நட்டால் போதுமான சூரிய ஒளி கிடைக்காமல் பட்டுப் போய் விடுகின்றன.

காடுகளில் செயற்கை ஒளியை உருவாக்க இயலாது. இதனால் விஞ்ஞானிகள் ஓர் எளிய முறை யைக் கையாண்டனர். செடி வளர்வதற்கு நடுவே இடம் விட்டு அதைச் சுற்றி அறுகோண வடிவில் கண்ணாடிகளைப் பதித்தனர். அவற்றின் மீது படும்  சூரிய ஒளி செடிக்குப் போதுமான வெளிச்சத்தைத் தந்தது. கண்ணாடி பதிக்கப்படாத செடிகளைக்' காட்டிலும் இவை 175 சதவீதம் உயரமாக வளர்ந்தன. இந்த ஆய்வின் வாயிலாக அடர்ந்த காடுகளில் நடப்படும் மரக்கன்றுகளுக்குப் போதுமான சூரிய ஒளி கிடைக்கக் கண்ணாடிகளைப் பயன்படுத்தலாம்  என்பது தெரியவந்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News