25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


விளையாட்டு போட்டிகள் APRIL 6TH
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் APRIL 6TH

குத்துசண்டை  

உலக குத்துச்சண்டை கோப்பைபிரேசிலில், முதல் சீசன் 70 கிலோஎடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் ஹிதேஷ் குலியா, இங்கிலாந்தின் ஓடெல் கமாரா மோத இருந்தனர். கடைசி நேரத்தில் காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் விலக,ஹிதேஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தங்கத்தை தட்டிச் சென்றார். உலக குத்துச்சண்டை கோப்பையில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்றவரலாறு படைத்தார் ஹிதேஷ். 

ஹரியானாவை சேர்ந்த ஹிதேஷ் குலியா 20, இந்திய கடற்படையில் மாலுமியாக உள்ளார். உள்ளூர் போட்டியில் சர்வீசஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், நடப்பு ஆண்டில் நடந்த சீனியர் தேசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப், 38வது தேசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றார். 

கூடைபந்து  

கூடைப்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கூடைப்பந்து கூட்டமைப்பு (எப்.ஐ.பி.ஏ.,)வெளியிட்டது. ஆண்கள் பிரிவில் இந்திய அணி,127.3 புள்ளிகளுடன் 81வது இடத்தில் இருந்து 76வதுஇடத்தை கைப்பற்றியது. கடந்த மாதம் ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில்பஹ்ரைனை வென்ற இந்தியா,11வது முறையாக ஆசியகோப்பை பிரதான சுற்றுக்கு முன்னேறியது. 

கார்பந்தயம்   

கார்பந்தயத்தில்ஜப்பானில் நடந்த 'பார்முலா-1''ரெட்புல் ரேஸிங் ஹோண்டா' அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *