ஐ.சி.சி..கனவு அணியில், ஆயுஷி, வைஷ்ணவி,திரிஷா, கமலினிக்கு இடம்.
. மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் நடந்தது. கோலாலம்பூரில் நடந்த பைனலில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. தொடர்ந்து 2வது முறையாக (2023, 2025) உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஐ.சி.சி., சார்பில், இத் தொடரில் சிறப்பாக விளை யாடிய வீராங்கனைகளை தேர்வு செய்து கனவு 'லெவன்' அணியை வெளி
யிட்டது. இதில் இந்தியா சார்பில் திரிஷா, கமலினி, ஆயுஷி, வைஷ்ணவி என, நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர்.
இத்தொடரில் அதிக ரன் குவித்த திரிஷா (309), தொடர் நாயகி விருது வென்றார்.
0
Leave a Reply