விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில், கல்லூரி மாணவ ,மாணவியர்களுக்கு சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம்.
.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (13.11.2025) மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் வாயிலாக, கல்லூரி மாணவ , மாணவியர்களுக்கு சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,, I A S., அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இச்சிறப்பு முகாமில், 200 தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கி கிளைகளின் மாவட்ட அளவிலான வங்கி பிரதிநிதிகள் கலந்து கொண்டு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்விக்கடன் சம்மந்தமாக எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்தனர். மேலும், கல்விக்கடன் வேண்டி பெறப்பட்ட விண்ணப்பங்கள் வங்கிகளின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு , அவ்விண்ணப்பங்கள் வங்கிக் கிளைகளில் பரிசீலனை செய்யப்பட உள்ளன.
அவ்வாறு, பரிசீலனை செய்யப்படும் விண்ணப்பங்களில், தகுதியான மாணவர்களுக்கு 20 – நாட்களுக்குள்ளாக கல்விக் கடன் வழங்கப்படும் என மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சு. பாண்டிச்செல்வன் அவர்கள் தெரிவித்துள்ளார். நடப்பு நிதி ஆண்டிற்கு கல்விக்கடன் இலக்காக ரூபாய் 38.11 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வங்கிகள் செப்டம்பர்-2025 வரை 576 மாணவர்களுக்கு ரூபாய் 27.61 கோடி கல்விக் கடனை வழங்கியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.அதனைத்தொடர்ந்து, இம்முகாமின் சிறப்பு நேர்வாக, 152 மாணவர்களுக்கு ரூபாய்.8.76 கோடி கல்விக்கடன் ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இம்முகாமில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.சு.பாண்டிச்செல்வன் அனைத்து வங்கிகளின் மாவட்ட பிரதிநிதிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0
Leave a Reply