அன்னாசி பழத்தின் சாறு
அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு . வகிக்கின்றன.
சிறிது ஜாதிக்காயுடன் அன்னாசிப்பழ சாறை கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். உங்கள் சருமம் மின்னும்.
சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் அன்னாசிப்பழச் சாறை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இந்த விழுதை சோப்பு தேய்ப்பது போல முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள கரும்புள்ளி, தேமல், பருக்கள் மாயமாக மறையும். அவை திரும்ப வராமல் தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு.
சிலருக்கு முகத்தில் நீர் கோத்துவீங்கிப் போய் இருக்கும். இதற்கு அன்னாசிப்பழச் சாறு அருமருந்து.
0
Leave a Reply