சமையல் மேடை பளிச்சென்று மின்ன.....
பருப்பை சேகரித்து வைத்திருக்கும் பாத்திரத்தில் நாலைந்து காய்ந்த மிளகாயைப் போட்டு வையுங்கள். பருப்பு நிறம் மாறவோ, பூஞ்சை பிடிக்காவோ செய்யாது
அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் என எல்லா இடங்களிலும் எண்ணெய் பிசுக்கு ஒட்டி இருந்தால், டைல்ஸை சாதாரண துணியால் துடைத்த பின் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பிசுக்கு பிடித்த இடங்களில் பூசிவிட்டு, உலர்ந்த துணியால் துடைத்தால் பளிச்சென்று மின்னும்.
உப்பு ஜாடியில் சிறிதளவு சோள மாவைப் போட்டுவைத்தால், உப்பு நீர்த்துப்போகாமல் இருக்கும்.
மட்டன், சிக்கன் போன்ற இறைச்சி வகைகளை மிக்ஸியில் அரைத்து எடுத்ததும் உடனடியாக மிக்ஸி ஜானர் சுத்தம் செய்ய வேண்டும். ஜாரினுள் இரண்டு பிரட் துண்டுகளைப் போட்டு அரைத்தெடுத்தால், பிசுக்கும் வாடையும் இருக்காது
0
Leave a Reply