பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி
வெயிலின் தாக்கத்தால் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. இதையடுத்து மாலையில் திடீரென குளிர்ந்தகாற்று வீசத்தொடங்கியது.
பின்னர் சிறிது நேரத்தில் இடியுடன் பலத்தமழை பெய்தது. பஞ்சு மார்க்கெட் நேரு சிலையில் இருந்து பழைய பஸ் நிலையம், மலையடிப்பட்டி கணபதியாபுரம். அரசு மகப்பேறு மருத்துவமனை, காந்தி கலை மன்றம், சங்கரன்கோவில் முக்கு, புதிய பஸ் நிலையம், சொக்கர்கோவில், ரெயில்வே மேம்பாலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.
மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவ , பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
0
Leave a Reply