மலையாள திரையுலகிலும், தமிழிலும் விருதுகளை பெற்ற மம்மூட்டி
முகம்மது குட்டி பனம்பரிம்பில் இஸ்மாயில் என்ற இயற்பெயரை கொண்டவர் மம்மூட்டி. கேரள மாநிலம் கொச்சியில் கடந்த 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி பிறந்தார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மம்மூட்டி அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் .அவருக்கு கலை மீது தீராத ஆர்வம் இருந்தது. இதன் காரணமாக சினிமாவில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என ஆர்வத்தோடு, 1971ஆம் ஆண்டு வெளியான அனுபவங்கள் பாளிசிக்கல் என்ற படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் டீசண்ட்டான வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து சில படங்களில் நடித்துவந்த அவருக்கு 1976ஆம் ஆண்டு எம்.டி.வாசுதேவன் நாயரின் அறிமுகம் கிடைக்க அவரது வாசுதேவனின் இயக்கத்தில் தேவலோகம் படத்தில் நடித்தார். 1979ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மம்மூட்டிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டாக முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார்.
மம்மூட்டியை பொறுத்தவரை தனது நடிப்பில் எந்த விதமான அலட்டலையும் காட்டிக்கொள்ளாதவர். தனது முக பாவனையிலேயே அனைத்தையும் சொல்லி அனைவரையும் கவர்ந்துவிடுவார். அதனால்தான் இந்தியாவிலேயே மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை அவர் பெற்றிருக்கிறார்.. மலையாள திரையுலகில் மம்மூட்டிதான் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த ஹீரோ..: மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் தமிழிலும் நடித்திருக்கிறார். 1990ஆம் ஆண்டு வெளியான மௌனம் சம்மதம் மற்றும் 1991ஆம் ஆண்டு வெளியான அழகன் படத்தில் நடித்த மம்மூட்டிக்கு தமிழில் மெகா ஹிட் படமாக அமைந்தது ரஜினியுடன் இணைந்து நடித்த தளபதி. அந்தப் படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்த மம்மூட்டி நட்புக்கு இலக்கணமாக இருக்கும் ஒருவர் எப்படி இருப்பாரோ அப்படி; பக்குவமாக நடித்திருந்தார். அதேபோல் தமிழில் அவர் நடித்த மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் உள்ளிட்ட பல படங்கள் ஹிட்டடித்திருக்கின்றன.
மம்மூட்டி ஏராளமான கேரள மாநில அரசின் விருதுகளை பெற்றிருக்கிறார். அதேபோல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஐந்து முறையும் பெற்றிருக்கிறார்.அந்த ஐந்து விருதுகளில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றில் நடித்ததற்காக ஒரு முறை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மம்மூட்டியின் நடிப்பில் கடைசியாக கிரிஸ்டோபர் வெளியானது.: இந்நிலையில் இன்று அவர் தனது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்தச் சூழலில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கைராலி டிவியின் ஓனர் மம்மூட்டி .மம்மூட்டிக்கு மொத்தம் 360 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.
0
Leave a Reply