இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா கல்விக் குழுமத்தின் 24 ஆவது விளையாட்டு விழா
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா கல்விக் குழுமத்தின் 24 ஆவது விளையாட்டு விழா பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திருமதி.L.சுஜாதா Deputy General Manager SDAT, Chennai அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்க, ஆனந்தா போர்டிங் நிர்வாகத் தலைவர் திரு.K.R.பிரபாகர் அவர்கள் விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.
பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பு செய்தார்.
சிறப்பு விருந்தினர் தனது உரையில்
இராஜபாளையம் மண்ணில் பிறந்து வளர்ந்து இத்தகைய பதவியில் இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்றும், அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் இன்ஜினியர் ஆக வேண்டும், டாக்டராக வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர ஒரு ஸ்போர்ட்ஸ் மேன் ஆக வேண்டும் என்று நினைப்பது இல்லை.
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பதைப் போல வீட்டுக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் மேன் உருவாக்கினால் ஆரோக்கியமான சமுதாயம் உருவாக்க முடியும் என்றும் விளையாட்டுத் துறையில் ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன அதனை இம்மண்ணின் மைந்தர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் விளையாட்டு வீரர்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் அரசாங்கத்தில் இருந்து கிடைக்கின்ற பல்வேறு சலுகைகளையும், சிறப்புகளையும் தெளிவாக எடுத்துக் கூறினார்.
விழாவில் மாணவர்கள் டேக் வான்டோ, யோகா, பிரமிடு, வில்வித்தை, சிலம்பம் மற்றும் பல வகையான உடற்பயிற்சிகளை அழகாக நிகழ்த்திக் காட்டினர். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கினர். விழாவில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக அலுவலர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
0
Leave a Reply