வானில் ஒரு வெள்ளை கோடு
வானில் எப்போதாவது புகை போல வெள்ளை நிறத்தில் கோடு போட்டுக்கொண்டு விமானம் செல்வதை பார்த்திருப்போம். 'ஜெட்' விமானங்களில் மட்டும் இது போன்று ஏற்படுகிறது.விமானம் பறக்கும்போது மட்டும் வானத்தில் வெள்ளை கோடு தெரியுதே? அது ஏன் தெரியுமா? வானத்தில் எவ்வளவோ விமானங்கள் பறந்தாலும், ஒரு சில விமானங்கள் பறக்கும் போது மட்டும் வானில் வெள்ளை நிறத்தில் புகை போல கோடு தெரிவதை பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் அது புகை இல்லை.. விமானம் பறக்கும் சத்தம் கேட்டாலே கிட்ஸ்களும் அவர்களுக்கு முந்தைய தலைமுறையினரும் அண்ணாந்து பார்த்து கண் பார்வையில் இருந்து மறையும் வரை விமானத்தை வேடிக்கை பார்க்காமல் இருந்து இருக்கவே மாட்டார்கள். அந்த பழக்கம் தற்போது கூட பல 90 கிட்ஸ்களுக்கும் இருக்கிறது என்றே சொல்லலாம். ஒரு காலத்தில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே பயணம் செய்து வந்த விமானங்கள் தற்போது மத்திய தர வர்க்கத்தினர் கூட பயணிக்கும் அளவுக்கு வந்து விட்டது. மெட்ரோ நகரங்கள் மட்டும் இன்றி ஓரளவு பெரிய நகரங்களுக்கு கூட தற்போது விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமான சேவையை இன்னும் விரிவுபடுத்தி ,இதற்கு அடுத்த நிலையில் உள்ள நகரங்களுக்கு கூட விமான சேவையை கொண்டு செல்ல உலக அளவில் பல்வேறு நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன.
. என்னதான், விமானம் தற்போது பரிட்சயம் ஆகிவிட்டாலும் இன்னமும் விமானம் மேலே பறந்தால் அண்ணாந்து பார்க்கும் பழக்கம் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. விமானம் வானத்தில் செல்லும் போது சில சமயங்களில் விமானம் புகை போல ஒரு தடத்தை உருவாக்கி செல்லும் இதை அனைவருமே பார்த்து இருக்கலாம். வானில் பல அடி உயரத்தில் பறந்து கொண்டு இருக்கும் போது இப்படி விமானத்திற்கு பின்னால் வால் போல அப்படியே வெள்ளை நிறத்தில் தடத்தை விட்டு செல்லும். சில நிமிடங்கள் கழித்து இது காற்றோடு காற்றாக கலந்து போவதை காண முடியும். எத்தனையோ விமானங்கள் சென்றாலும் சில விமானங்களில் மட்டும் ஏன் புகை போன்று வெளியாகிறது என பலரும் யோசித்து இருக்கக்கூடும். சாதாரண பெட்ரோல் வாகனங்களில் கூட தற்போது புகை வெளியேறுவது கண்ணுக்கு தெரிவது இல்லை. ஆனால், விமானம் இப்படி புகையை கக்கியபடியா செல்ல வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. புகை கிடையாது. உண்மையில் விமானத்தில் இருந்து புகைதான் வெள்ளை நிறத்தில் இப்படி வெளியேறுகிறதா? விமானம் பல அடி உயரத்தில் வானத்தில் சென்று கொண்டு இருக்கும் போது இப்படி விமானத்தின் பின்னால் வால் போல வெள்ளை நிறத்தில் தடம் உருவாவது உண்மையில் புகை கிடையாது. அது வெறும் நீராவிதான்..
நீராவி தான் இப்படி வெள்ளை நிற பட்டையை உருவாக்குகிறதாம். விமானம் காற்றில் இருக்கும் போது, என்ஜின் குறிப்பிட்ட அளவு நீரை உற்பத்தி செய்வதோடு அதை வெளியிடவும் செய்யும். நீராவியாக இந்த நீர் வெளியேற்றப்படும் போது பல அடி உயரத்தில் உள்ள குளிர்ச்சியான காற்றில், இது பரவுகிறது. குளிர்ச்சியான இடத்தில் வெளியேறும் இந்த நீராவி அப்படியே உறைந்து வளிமண்டலத்தில் ஒடுங்கும். ஈரப்பதம் இல்லாவிட்டால்: இதுவே விமானத்தின் பின்பகுதியில் நீளமான வெள்ளை மேகங்களாக காட்சி அளிக்கிறதாம்.. எது எப்படியோ இவ்வளோ நாளா அது விமானத்தின் புகை என நம்பிக் கொண்டு இருந்த நிலையில் புகைக்கும் அந்த வெள்ளை நிறப்பட்டைக்கும் தொடர்பே இல்லை என்பதே உண்மை.. அது ஜெட் என்ஜின் கொண்ட விமானங்களில் மட்டுமே இந்த நிகழ்வு ஏற்படும். அதேவேளையில் அனைத்து விமானங்களும் இந்த நீராவியை உருவாக்காது. இது வெளிப்புறத்தில் உள்ள வளிமண்டலத்தின் சூழலை பொறுத்தது. காற்று போதுமான குளிர்ச்சி மற்றும் ஈரப்பதமாக இருந்தால் மட்டுமே வெள்ளை நிறத்தில் நீராவி பட்டை விமானத்தில் பின்னால் உருவாகும். காற்றில் போதுமான ஈரப்பதம் இல்லாவிட்டால் என்ஜினில் இருந்து துகள்கள் (particles) உறைவது தவிர்க்கப்படும்.
ஆனால் இது புகை இல்லை. நீராவி. ஜெட் விமான இன்ஜின் உள்ளே எரிபொருள் எரியும் போது, அதில் அடங்கியிருக்கும் ஹைட்ரஜனும் காற்றில் உள்ள ஆக்ஜிசனும் சேர்ந்து நீராவியாக மாறுகிறது. இந்த நீராவி வெளியேற்றப்படுவது தான் நமக்கு வெள்ளைப் பட்டையாகக் கோடு வடிவத்தில் தெரிகிறது. இப்பகுதியில் ஈரப்பதம் குறைவு எனில் கோடு விரைவில் மறையும். அதிகம் இருந்தால் மறைய நேரம் ஆகும்.
0
Leave a Reply