25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் >> ராஜபாளையம் ராம்கோ நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி ராமசாமி ராஜா பிறந்தநாள் விழா APRIL 24 கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறப்பு திட்ட முகாம் நிறைவு >> ராஜபாளையம் கோயில்வழிபாடு, திருக்கல்யாண நிகழ்ச்சி. >> ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண திருவிழா >> ஸ்ரீ ரமண வித்யாலயா பள்ளியில்  இலக்கிய மன்றம் நிறைவு விழா >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண் டாள் கோயிலில் யுகாதி விழா . >> கோதண்டராமர் கோவிலில் பிரமோற்சவ விழா. >> பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >>


வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் வேளாண் விரிவாக்க சேவைக்காக ஓராண்டு பட்டய படிப்பிற்கு TN அக்ரிஸ்நெட் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் வேளாண் விரிவாக்க சேவைக்காக ஓராண்டு பட்டய படிப்பிற்கு TN அக்ரிஸ்நெட் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கு வேளாண் விரிவாக்க சேவைக்கான ஓராண்டு பட்டய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட அளவில் இணையதள போர்டல் TNஅக்ரிஸ்நெட் வலைதளத்தில் முகப்பு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.ஹைதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் மேலாண்மை விரிவாக்கப் பயிற்சி நிலையம் (MANAGE)  உடன் சமிதி பயிற்சி நிலையமும் இணைந்து வேளாண் விரிவாக்க சேவைக்கான ஓராண்டு பட்டயப் படிப்பினை (DAESI)  நடத்தி வருகிறது.

வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் இடுபொருள் வழங்குவதோடு மட்டுமல்லாது வேளாண் களம் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குவதில் முதன்மையாக விளங்குகின்றனர். பெரும்பாலான வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் வேளாண் சார்ந்த முறையான கல்வியினை பெற்றிருப்பதில்லை.எனவே, வேளாண்மையில் இடுபொருள் விற்பனையாளர்கள் தொழில் நுட்பதிறனை/அறிவினை மேம்படுத்துவதற்கும், வேளாண் இடுபொருள்களை விற்பதற்கும் இப்பட்டையப் படிப்பில் இணைந்து பயன் பெறமுடியும்.இப்படிப்பிற்கு மாவட்ட வாரியாக விண்ணப்பதாரர்கள் மேற்காணும் பட்டய படிப்பிற்கு விண்ணப்பிக்க ஏதுவாக TN அக்ரிஸ்நெட் இணையதளத்தில் தனியொரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. https://www.tnagrisnet.tn.gov.in/daesi/இணையதள இணைப்பினை பயன்படுத்தி விபரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,அவர்கள்கேட்டுக்கொண்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News