இனி ஒரு உயிர் போகக் கூடாது அஜித், விஜய் எடுத்த முடிவு.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான தல, தளபதி, துணிவு, வாரிசு படங்களில் அஜித், விஜய் ரசிகர்கள் ஸ்பெஷல் ஷோ பார்ப்பதற்கு அளவுக்கு அதிகமாகவே கொண்டாடி, அடிதடி, கை, கால் ஒடித்துக் கொண்டு, சிலர் உயிரையே விட்டள்ளனர். இவை மனித சமுதாயத்திற்கு ஆரோக்கியமான விஷயமே இல்லை. காசு வாங்கி நடிப்பவர்கள் ஹாயாக இருக்க ,காசு கொடுத்து உயிரை பணயம் வைக்கும் ரசிகர்களை, எதில் சேர்ப்பது என்று தெரியவில்லை. அஜித்தும், விஜய்யும் ரசிகர்களின் இந்த விபரீத விளையாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ,இனி ஒரு உயிர் கூட போகக்கூடாது என்று முடிவு செய்து சிறப்புக் காட்சிகளை வெளியிடக் கூடாது, என்று முடிவு எடுத்துள்ளனர்.இந்த அறிவிப்பால் ரசிகர்களும், பட விநியோகிஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
எங்களுக்கு சோறு போடுங்க , எங்களை தலையில் தூக்கி வச்சு ஏன் கொண்டாடுகிறீர்கள் ? என்று நடிகர் சத்யராஜ் கூறினார். சினிமாவுக்கு ஏன் இவ்வளவு செலவையும், நேரத்தையும் வீணாக்குகறீர்கள் என்று சீமான் கூறினார். சந்தோஷமாக கொண்டாடுங்கள். உயிரை விடாதீர்கள் என்று விஜய், அஜித் கூறினார்கள் எங்களுக்கு நடிக்க மட்டும் தான் தெரியும் அமைதியாகக் கொண்டாடுங்கள் என்று கூறுகின்றனர்.
0
Leave a Reply