25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >>


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மூலிகைகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மூலிகைகள்

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் அஸ்வகந்தா, கிலோய், அதிமதுரம், துளசிமற்றும் நெல்லிக்காய் ஆகிய ஐந்து ஆயுர்வேத மூலிகைகள் இவை உடலில் நோய் தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. இதன் மூலம் இருமல், தொண்டைப்புண், தொண்டை வலி, உடல் சோர்வு ஆகியவை குணமாகும்

அஸ்வகந்தா: ஆயுர்வேதத்தின் முக்கியமான மூலிகைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும் சிறந்த மூலிகை. அரை ஸ்பூன் அஸ்வகந்தா பொடியை இரண்டு கப் நீரில் கொதிக்க வைத்து சிறிது இஞ்சியை சேர்த்து பாதியாக வற்றும் வரை கொதிக்க விட்டு ஆறியதும் சிறிது தேன் கலந்து பருகவும். இது சிரப் மற்றும் கேப்சூல் வடிவிலும் கூட கிடைக்கிறது.

கிலோய்: இது ஆன்ட்டி ஆக்சிடென்ட், அழற்சி எதிர்ப்பு, நோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. இரண்டு ஸ்பூன் கிலோய் சாறுடன் சிறிது நீர் கலந்து எடுத்துக்கொள்ள நல்ல பலன் கிடைக்கும். இதுவும் சிரப் வடிவிலும்  காப்ஸ்யூல் வடிவிலும் கிடைக்கின்றது.

அதிமதுரம்: நோய் தொற்றுகளை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தி நிறைந்தது. உடலிலுள்ளதேவையற்ற பாக்டீரியா மற்றும் கிருமிகளை கண்டறிந்து அழிக்கும் ஆற்றல் கொண்டது. நோயிலிருந்துகாக்கக்கூடிய சக்தி பெற்ற அதிமதுர பொடியை 10 கிராம்அளவு எடுத்து 200 கிராம் டீத்தூளுடன் கலந்து விடவும். இதனைதினசரி நாம் டீ தயாரித்து பருக, நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

துளசி: நோய் தொற்றுகளை தடுப்பதில் முக்கியப் பங்கு வைக்கும் துளசியை டீ போல் தயாரித்து பருகலாம். ஒருகப் நீரில் பத்து துளசி இலைகளை சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு வேளை விதம் பருக, நம்உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். துளசிசெடிகளை வீட்டில் வளர்க்கலாம். துளசி இலை பொடிகள் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது.

ஆம்லா(நெல்லிக்காய்): வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த நெல்லிக்காயில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். சிறந்த காயகல்பமாக விளங்கும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். இதனை தினமும் காலையில் பச்சையாகவோ அல்லது ஜூஸாக செய்தோ சாப்பிடலாம். நெல்லிக்காயை தினம் ஒன்று என சாப்பிட, பழக்கப்படுத்திக் கொண்டால் நல்லது. இது முரப்பா வடிவிலும் கிடைக்கின்றது. நெல்லிக்காய் சாறு அல்லது ஆவியில் வேகவைத்த நெல்லிக்காயை தினம் ஒன்றாக சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News