25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >> பூபதிராஜூ கூட்டுறவு நாணய வங்கி நுாற்றாண்டு விழா >> ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா. >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >>


கீரையில் உள்ள பலன்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கீரையில் உள்ள பலன்கள்

கீரை வகைகள் ஒவ்வொன்றும் நமது உடல் நலனுக்கு ஒவ்வொரு வகையில் உதவுகின்றன. புதினா கீரை: இரும்புச் சத்துள்ளதால், இரத்த சோகையைப் போக்கும்.

மணத்தக்காளி கீரை: இதில்வாய்ப்புண், குடல்புண் ஆகியவற்றை குணப்படுத்தும். கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி சத்துக்கள் உள்ளது..

கொத்தமல்லி கீரை: பார்வைக் கோளாறு, இரத்த சோகை ஆகியவற்றைப் போக்கும்.வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளது 

புளிச்சக் கீரை:  இரத்த சோகையைப் போக்கும் வைட்டமின் ஏ, சி, பாஸ்பரஸ், கால்சியம் உள்ளது. இக்கீரையைச் சமைத்த நீரை வீணாக்காமல் சூப், ரசம் வைத்து சாப்பிட, சத்துக்கள் கிடைக்கும்.

வெந்தயக் கீரை: இதில் வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, கால்சியம் உள்ளதால் பார்வைக் கோளாறு, இரத்த சோகையைப் போக்கும். இக்கீரையை நன்கு கழுவி பயன்படுத்த வேண்டும்.

பசலைக் கீரை: வைட்டமின் ஏ, இரும்பு, பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் இதில் உள்ளன. ஆதலால் பார்வைத் திறனை இது மேம்படுத்தி உடல் சோர்வைத் தடுக்கும்.

பொன்னாங்கண்ணிக் கீரை: இதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பாஸ்பரஸ் சிறிதளவு உள்ளது. மேலும், இரும்பு, கால்சியம் சத்துக்களும் உள்ளன. இக்கீரை சருமத்தை தகதகவென தங்கம் போல் மிளிர வைக்கும்.

முருங்கைக் கீரை: வைட்டமின் ஏ, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியவை இந்தக் கீரையில் உள்ளன. வைட்டமின் ஏ சத்து இதில் மிகுந்துள்ளதால் கண் பார்வைக்கு மிகவும் சிறந்தது.

முளைக்கீரை: வைட்டமின்கள் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம் ஆகியவை இக்கீரையில் உள்ளன. இது இரத்த சோகையைப் போக்கும். இந்தக் கீரையை சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.

அகத்திக்கீரை: இக்கீரையில் வைட்டமின் ஏ, டி, சி, கால்சியம் ஆகியவை சிறிதளவு உள்ளன. வைட்டமின் ஏ 5400 மைக்ரோ கிராம் உள்ளது. ஆதலால் இது இரத்த சோகை, எலும்பு பலவீனமாதல் ஆகியவை வராமல் காக்கும். இந்தக் கீரையை மூடிய பாத்திரத்தில் சமைத்தால் சத்துக்கள் வீணாகாது.

கருவேப்பிலை: இதில் வைட்டமின் ஏ,7500 மைக்ரோ கிராம் உள்ளது. போலிக் அமிலம், கால்சியம், வைட்டமின் பி, சி ஆகியவை சிறிதளவு உள்ளன. வைட்டமின் ஏ சத்து மிகுந்துள்ளதால் கண் பார்வைக்கு இது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News