பித்தளை செம்பு பாத்திரங்கள் பளபளக்க......
தயிர், மோர் வைக்கும் பாத்திரங்களை சுத்தம் செய்ததும் வெயிலில் காய வைத்தால் அதில் உள்ள வாடையும் போய்விடும். கிருமிகளும் அண்டாது.
பித்தளை செம்பு பாத்திரங்களை வெந்நீரில் சோப்பு போட்டு கரைத்த. கரைசலில் கழுவி பின்பு வினிகரில் உப்பைக் கலந்து நன்றாக தேய்த்தால் பாத்திரங்கள் பளபளக்கும்.
வாணலியில் கறை போக சமையல் உப்பை போட்டு சூடு படுத்திவிட்டு பேப்பரால் துடைத்தால் பளபளப்பாக இருக்கும்.
பொரித்த அப்பளம் நமத்து விட்டால் கூட்டு செய்யும்போது நமத்த அப்பளத்தை சிறு துண்டுகளாக பிய்த்து போட்டு பாட்டு கலந்துவிடவும். கல இந்த அப்பளக்கூட்டு சுவையாக இருக்கும்.
பருப்பு சாதத்திற்கு, பருப்பை வேக வைக்கும்போதே. முருங்கை காயின் நடுவில் உள்ள சதை பகுதியையும் எடுத்து வேக வைத்து, சாதத்துடன் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
0
Leave a Reply