கேரட் எளிதாக துருவ
ரவையை நெய் விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊறவைத்து பிறகு சர்க்கரை பாகு செய்து கேசரி கிளறினால் சுவை இரட்டிப்பாகும்.
வாழை இலையை பின்புறமாக தனலில் காட்டி அதன் பிறகு உணவை பொட்டலமாக கட்டினால் இலையை எவ்வளவு மடக்கினாலும் கிழியாது.
பூரிக்கு மாவுபிசையும் போது ஒரு டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து பிசைந்தால் நல்ல நிறத்துடன் பூரி சுருங்காமல் வரும்.
கேரட்டை தோல் சீவி ஐந்து நிமிட தண்ணீரில் ஊற வைக்கவும்.பிறகு எடுத்து துருவினால் கேரட் மிருதுவாகி, எளிதாக துருவ வரும்.
பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை அதிகமாக உரிக்க வேண்டி இருந்தால் கொதிக்கும் நீரில் போட்டு உடனேஎடுத்து குளிர்ந்த நீரில் போடவும்.பிறகு எடுத்து உரித்தால் சுலபமாக வரும். பருப்புவகைகள்,நட்ஸ்,ரவைபோன்றவற்றைவேகவைப்பதற்குமுன்பொன்னிறமாகவறுத்துஎடுத்துபின்வேகவைத்தால்உணவுநல்லமணமாகவும்.ருசியாகவும் இருக்கும்.
0
Leave a Reply