கெமிக்கல் இல்லாத சரும அழகை பொலிவாக்கும் நெய்
மேல் பூச்சுக்கு மேக்கப் தயாரிப்புகள் பயன்படுத்தினாலும், சருமத்தை உள்ளிருந்து அழகாக்கும் ஆற்றல் நெய்க்கு உள்ளது. அதிகம் வேண்டாம், தினமும் அரை ஸ்பூன் நெய்யை முகத்தில் பூசி வந்தால் போதும்..நெய் இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது .
தினமும் சில சிட்டிகை நெய்யை முகத்தில் பூசினால், சருமத்தில் ரத்த ஓட்டம் சீராகும். புத்துணர்ச்சியும் பளபளப்பும்நெய் மிகச்சிறந்த மாயிஸ்ச்சரைசர். இது செல்களில் ஊடுருவி, சரும செல்களுக்கு தேவையான சத்துக்களை கொடுத்து, புத்துணர்ச்சி அளிக்கிறது. எல்லா ஸ்கின்னுக்கும் ஏற்றது.
அரை ஸ்பூன் நெய்யை எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தலாம். இது வறண்ட சருமத்திற்கு, ஈரப்பதம் அளிக்கிறது. எண்ணெய் பசை சருமத்துக்கு, அதிகப்படியான எண்ணையை நீக்கி, பொலிவைத் தருகிறது. சென்சிடிவ் வான சருமத்துக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல், ஸ்கின்னை மெருகேற்றுகிறது .
தினமும் அரை ஸ்பூன் நெய்யை முகத்தில் பூசி வருவது, மிகச்சிறந்த ஆன்டி- ஏஜிங் தீர்வாகும். சரும செல்களுக்கு ஊட்டமளிப்பதால், சுருக்கம், கோடுகள், கரு வளையம், போன்ற எந்த விதமான வயதாகும் அறிகுறியும் தோன்றாது. சருமத்தை பாதிக்ககூடிய எந்த விதமான ரசாயனமும் இல்லாத, எளிமையான, ஆனால் பல நன்மைகள் கொண்டது நெய்.
. தினமும் தூங்கச் செல்வதற்கு முன்பு, முகத்தை நன்றாக கழுவி துடைத்துக் கொள்ளுங்கள். அரை ஸ்பூன் நெய்யை (கெட்டியாக இருந்தால் உருக்கி) முகத்தில் பூசி,2TO3 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். காலையில் முகம் கழுவலாம். சில நாட்களில் முகம் பொலிவாகும் .
0
Leave a Reply