சுவையான கோதுமை பாயசம்
ஒரு கரண்டி கோதுமை மாவை நெய்யில் வாசனை வரும் வரை நன்கு வறுத்து, பின் தேவையான தண்ணீர் சேர்த்து வேக விடவும். பிறகு காய்ச்சின பால், சர்க்கரை, ஏலப்பொடி, வறுத்த முந்திரி சேர்க்க சுவையான, மணமான கோதுமை பாயசம் ரெடி
சாம்பார் பொடிக்கு அரைக்கும் போது ஒரு கப் புழங்கலரிசி சேர்த்து அரைக்கலாம். இந்தப் பொடியைக் கொண்டு சமைக்கும் போது சாம்பார் குழைவாகவும், கெட்டியாகவும் வரும். இதனால், பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியமும் இருக்காது.
வறுவல், கூட்டு ஆகியவற்றில் உப்போ, காரமோ அதிகமாகிவிட்டால் உலர்ந்த பிரெட் ஒரு ஸ்லைஸ் அல்லது இரண்டு ரஸ்க் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடித்து சிறிது தூவினால் சரியாகிவிடும். எந்த வகை சூப் செய்தாலும் கொதிக்கும் போது சிறிது பொட்டுக் கடலை மாவை நீரில் கலந்து சேர்த்தால் சூப் திக்காக இருக்கும்.
வெண்டைக்காயை வதக்கும் போது புளித்த மோரைச் சேர்த்தால் மொறு மொறு வென இருக்கும்.
. வத்தக் குழம்பு செய்யும் போது கடைசியாக மஞ்சள், மிளகுத் தூளைச் சேர்த்தால் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.
துவரம் பருப்பை வேக வைக்கும் போது. பருப்புடன் ஒரு டீ ஸ்பூன் வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால் சாம்பார் இரவு வரை ஊசிப் போகாமல் இருக்கும் ,உடம்புக்கும் நல்லது.
0
Leave a Reply