சப்பாத்தி கட்டையில் மாவு ஒட்டாமல் வர ........
கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் போன்றவற்றை சாப்பர் இல்லாமல்ரொம்பவும் பொடியாக நறுக்க முடியாது. இந்த சமயத்தில் எப்பொழுதும் போல பெரிது பெரிதாக துண்டுகள் போட்டு மிக்ஸியில் பல்ஸ் மோடில் ஒரே ஒரு சுற்று சுற்றி எடுத்து பாருங்கள். சாப்பரில் வெட்டியது போலவே பொடி பொடியாக உங்களுக்கு காய்கறிகள் கிடைத்து விடும். சமைப்பதற்கு நேரமும் மிச்சமாகும்.
சப்பாத்திக்கு மாவை சப்பாத்தி கட்டையில் தேய்க்கும் பொழுது கட்டையுடன் மாவு ஒட்டிக் கொண்டால், சிரமமாக இருக்கும். இந்த சமயத்தில் உருட்டு கட்டையையும், சப்பாத்தி கட்டையையும் சேர்த்து ஃப்ரீசரில் இரண்டிலிருந்து மூன்று நிமிடம் வைத்து எடுங்கள். அதன் பிறகு சப்பாத்தி தட்டி பாருங்கள், கொஞ்சம் கூட ஒட்டாது. சப்பாத்திக்கு மாவையும், பூரிக்கு எண்ணெயையும் தொட்டு தேய்ப்பது நல்லது.
மண்ணால் செய்த தோசை கல் என்று நம்பி தானே இந்த தோசை கல்லை வாங்கினோம், ஆனால் இதிலும் கலப்படம், எப்படி எல்லாம்ஏமாற்று கிறார்கள் பாருங்கள். மண் தோசை கல் நடுவில் சிமென்ட் லேயர் வைக்கப் பட்டுள்ளது. ஆகவே இந்த தோசை கல் உங்கள் வீட்டில் இருந்தால் ஒருமுறை செக் பண்ணி பாருங்க.ஆனால் தோசை கல்லை உடைத்தால் தான் உள்ளே இருப்பது மண்ணா அல்லது சிமெண்ட்டா என்பதை கண்டு பிடிக்க முடியும். ஒரு வேளை நடுவில் சிமென்ட் லேயர் பூசிய மண் தோசை கல்லாக இருந்தால், அதில் தொடர்ந்து தோசை வாத்து சாப்பிடக்கூடாது. அது உடலுக்கு ஆரோக்கியமும் அல்ல .
0
Leave a Reply