குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
ராஜபாளையம் சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலப் பணிகள் மற்றும் அதன் கீழ் இரண்டு பக்கமும் சர்வீஸ் ரோட்டிற்கான பணிகள் நடந்து வருகிறது.ரோட்டின் ஒரு பகுதியில் தாமிரபரணி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி, குடிநீர் ரோட்டில் வழிகிறது.ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர் ரோட்டில் குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி வருவதுடன், மேம்பாலம் கீழ்பகுதியில் ஒரு பகுதியில் போக்குவரத்து பாதித்து வருகிறது. ஏற்கனவே மண்ரோடாக உள்ளதால் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி இப்பகுதியினர் போக்குவரத்தை பயன்படுத்த முடியாமல், சகதியாக மாறி உள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே குழாய் உடைப்பை சீரமைக்க உடனடி நடவடிக்கை வேண்டும், என எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply