வியர்வை நாற்றம் நீங்க...
சந்தனத்தை பன்னீருடன் கலந்து உடலில் பூசி ஊறவைத்து இளம் வெந்நீரில் குளிக்க வியர்வை நாற்றம் நீங்கும்.
ஆவாரம்பூவை உலர்த்தி சமஅளவு பயித்தமாவு கலந்து அரைத்து தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் வேர்வை நாற்றம் அகலும்.
மருதாணி இலை 100 கிராம் மருதாணி பூ 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 50 கிராம் மூன்றையும் நன்றாக அரைத்து எலுமிச்சை சாற்றில் கலந்து பூசி குளிக்க வேர்வை நாற்றம் அகலும்.
ஆரஞ்சு தோல், எலுமிச்சை தோல், ரோஜா இதழ்கள், மகிழம்பூ வெட்டிவேர் இவைகளை சமனளவு எடுத்து நன்றாக உலர்த்தி தூள் செய்து உடலில் பூசி 15 நிமிடம் ஊறவைத்து குளிக்க உடலில் நறுமணம் கமழும்.
தினமும் குளிப்பதற்கு முன்பு கெட்டித்தயிருடன் ரோஸ் வாட்டர் கலந்து நன்றாக குழைத்து அக்குளில் பூசி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். அக்குளில் சோப்பை தவிர்த்து பாசிப்பருப்பு மாவை தேய்த்து குளித்துவரவும், வியர்வை வந்தாலும் வியர்வை நாற்றத்தை உண்டாக்காது .
0
Leave a Reply