பலாப்பழ கொட்டைகள்
பலாப்பழங்களை போலவே பலாக்கொட்டைகளிலும் நிறையமருத்துவ நன்மைகள்ஒளிந்து கொண்டிருக்கின்றன. பலாக்கொட்டை. பழங்களை நாம்விரும்பி சாப்பிடும்அளவுக்கு, அந்தபழங்களின் விதைகளைநாம் சாப்பிடுவதில்லை.துத்தநாகம், வைட்டமின்கள், நார்ச்சத்துஎன ஏகப்பட்டவிஷயங்கள் இந்தபலாக்கொட்டையில் உள்ளன.. இதனால் உங்கள்திசுக்களுக்கு வலிமையையும், நோய் எதிர்ப்புசக்தியையும் வழங்குகிறது.முக்கியமாக நிறையபுரோட்டீன் உள்ளது..தசைகளை வலுவாக்கஇந்த கொட்டைகளிலுள்ளபுரதங்கள் உதவுகின்றன.
100 கிராம் பலாக் கொட்டைகளில், ஒரு கிராமுக்கு குறைவாகவே கொழுப்புச்சத்துக்களும், 38 கிராம் கார்போவும் இடம்பெற்றுள்ளன... இந்த பலாக் கொட்டைகளை நன்றாக காயவைத்து, பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். செரிமான கோளாறு ஏற்படும்போதெல்லாம் இந்த பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.ஆக்ஸிஜனேற்ற பண்புகள் பலாக்கொட்டைகளிலுள்ளதால், வயதான தோற்றம், சரும சுருக்கங்களுக்கு எதிராக போரிட செய்கிறது.
இரும்பு சத்து நிறைந்துள்ளதால், பெண்களை அனீமியா அண்டுவதில்லை.. நார்ச்சத்து நிறைந்துள்ள பலாப்பழ கொட்டைகள், மலச்சிக்கலை தீர்க்கின்றன.. வைட்டமின் A இந்த பலாப்பழ கொட்டைகளில் நிறைந்திருப்பதால், கண் பார்வையை அதிகரிக்க செய்கிறது.கண்புரை, மாகுலர் சிதைவு போன்ற கண்தொந்தரவுகளிலிருந்தும்தடுக்கிறது.மாலைக்கண்நோய்களும்தடுக்கப்படுகின்றன.
பலாக்கொட்டையில் குழம்பு, கூட்டு, பொரியல்என எதுவேண்டுமானாலும் செய்யலாம்.ஆவியில் அவித்தும்சாப்பிடலாம்.நெருப்பில்சுட்டும் சாப்பிடலாம்.கேரளாவில் இந்தகொட்டைகளை நன்றாகஅரைத்து மாவாக்கி,அல்வா, லட்டு,புட்டு இப்படியெல்லாம்செய்வார்களாம். ஆனால்,பலாக்கொட்டைகளை சமைக்கும்போது, தேங்காய், சர்க்கரை, நெய்போன்றவற்றை அளவுடன்பயன்படுத்த வேண்டும்.
0
Leave a Reply