கல்கி படத்தின் பிரம்மாண்டமான ட்ரெய்லர்
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரிய தோல்வியை கொடுத்து தற்போது வரை ஒரு வெற்றிக்காக போராடும் அளவிற்கு தள்ளி விட்டது.அந்த வகையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் தற்போது கல்கி 2898 ஏ.டி என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதில் இவருக்கு வில்லனாக உலக நாயகன் கமலஹாசன் நடித்திருக்கிறார். இவர்களுடன் சேர்ந்து அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், துல்கர், ராணா, திசா பதானி போன்ற ஏகப்பட்ட நடிகர்கள் ஒன்றாக சங்கமித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை வைஜேந்தி மூவிஸ் தயாரித்திருக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த மாதம் 27ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இந்திய சினிமாவையே புரட்டிப் போடும் அளவிற்கு ஒரு சரித்திரத்தை படைக்கப் போகிறது.
அதாவது ஆரம்பத்தில் விஷ்ணுவை காட்டி இந்த உலகின் கடைசி நகரம் காசி என சொல்லும் ஒரு சிறுவனின் குரலோடு தொடங்குகிறது. ட்ரெய்லரில் பார்க்கும் பொழுது பிரபாஸின் கதாபாத்திரம் ரொம்பவே சீரியஸாக இல்லாமல் நகைச்சுவை கலந்த பாணியில் இருப்பதாக தெரிகிறது.ஆக மொத்தத்தில் ட்ரெய்லரை பார்க்கும்பொழுது படம் போர் அடிக்காத வகையில் ஒரு தரமான படமாக இருக்கும்.
0
Leave a Reply