25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விடுதலை திரைப்படம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விடுதலை திரைப்படம்

விடுதலை திரைப்படம்  உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் விமர்சகர்களின் பாராட்டுக்களை குவித்து வருகிறது.வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை. இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷின் தங்கை பாவானிஸ்ரீயும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷின் தங்கை பாவானிஸ்ரீயும் ,இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள. இப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் படம் குறித்த தங்களின் விமர்சனங்களை சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர். 

 விடுதலை முதல் பாதி- காவியத் திரைப்படத் தரத்தை மீண்டும் வெற்றிமாறன் வெளிப்படுத்தியிருக்கிறார். ரயில் விபத்தின் பின்விளைவுகளை உள்ளடக்கிய முதல் பதினைந்து நிமிடங்கள் இந்திய சினிமா இதுவரை கண்டிராத ஒன்று! பிரம்மாண்டம் என்பது பளபளக்கும் செட் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மட்டுமல்ல, திரையில் பாதிக்கப்பட்டவர்களின் ஆழமான உணர்ச்சிகள், கஷ்டங்கள், கொடூரமான வன்முறை மற்றும் வலி ஆகியவற்றை நம்பவைத்து வெளிப்படுத்தும் விதம் உண்மையிலேயே விதிவிலக்கானது! அரசியல் ரீதியாக அவர் எப்போதும் சமநிலையானவர்! அதை விரும்புகிறேன்.. என சூப்பர் ஈமோஜியை குறிப்பிட்டுள்ளார்.விடுதலை முதல் பாதி ரயில் விபத்துக்குப் பிறகு இளையராஜாவின் பின்னணி இசை உலகத்தரம் வாய்ந்தது. சூரி மனிதாபிமான காவலர் சிறந்தவர். காவல்துறை, அரசு அமைப்பு மற்றும் அரசியல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மீண்டும் பாராட்டுக்கள், அவரது கேமரா கோணங்களும் பிரேம்களும் சூப்பர் என பாராட்டியுள்ளார். விடுதலை படம் விமர்சகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருவது படக்குழுவினரையும் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சூரி செம்ம பொருத்தம்.. அவரது அப்பாவித்தனம் மிகவும் இயல்பாக இருந்தது. நேர்மையான காவலராக பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் என குறிப்பிட்டுள்ளார். . இதுவரை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது என பதிவிட்டுள்ளார். மேலும் இது கதையின் நாயகர்களின் காலம்என்றும் மனதையும் காதையும் இம்சிக்காத தேனாய் பின்னணி இசை! என்றும் விடுதலை படத்தை குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை முதல் பாதி என ஒரு ஸ்டார் பதிவிட்டுள்ளார். மேலும் வெற்றிமாறன் ஒருபோதும் இம்ப்ரஸ் செய்ய தவறுவதில்லை. பவானி ஸ்ரீ மற்றும் நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளார்கள். லொகேஷன் மற்றும் உருவாக்கம் டாப். அறிமுகம் ஒரே ஷாட்.மெதுவான விவரிப்பு ஆனால் முற்றிலும் ஈர்க்கக்கூடியதாக உள்ளது. விஜய் சேதுபதிக்கான பில்ட்அப்ஸ் சூப்பர்.இரண்டாம் பாதியில், கதை இப்போது தொடங்குகிறது சூப்பர் என குறிப்பிட்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News