சருமத்துக்கு பாதுகாப்பை தரும் வெங்காயம் .
வெங்காயத்தில் வைட்டமின் A,C,K நிரம்பியுள்ளதால் நம்முடைய சருமத்துக்கு போதுமான பாதுகாப்பை தருகின்றன.. புற ஊதா கதிர்களிலிருந்தும் பாதுகாக்கின்றன. அதனால்தான், முகத்தில் ஃபேஸ்பேக் போல வெங்காய சாற்றினை பயன்படுத்துவார்கள்.. ஆனால், முகப்பரு, காயங்கள், சிறு கட்டிகள் ஏதாவது இருந்தால், இந்த வெங்காய சாறு பூசக்கூடாது. ஆனால், நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
சருமத்தில், கட்டிகள் இருந்தாலும், இந்த சின்ன வெங்காயம் உதவுகிறது.. வெங்காயத்தை சுட்டு, சிறிது மஞ்சள், நெய் கலந்து இளஞ்சூட்டுடன் கட்டிகள் மீது வைத்து காட்டினால், நாளடைவில் கட்டிகள் பழுத்து உடையுமாம்.
தலைவலி தீரவேண்டுமானால் அதற்கும் வெங்காயத்தை அரைத்து பற்று போடுவார்கள்.தலைமுடி வளர்ச்சிக்கும் வெங்காயம் உதவுகிறது. தேங்காய் எண்ணெய் காய்ச்சும்போது, வெங்காய விழுதையும் கொட்டி காய்ச்சி வடிகட்டி பயன்படுத்தலாம்.. சின்ன வெங்காயத்தில் உள்ள சல்ஃபர் என்ற வேதிப்பொருள் இருப்பதால், தலைமுடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.சின்ன வெங்காயச் சாற்றை தலையில் 5 நிமிடம் மசாஜ் செய்வதனால் ரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது.
0
Leave a Reply