25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


கோடை  வெயிலால் முகம் கருத்துப் போவதைத் தடுக்க ரோஸ் வாட்ட ர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோடை வெயிலால் முகம் கருத்துப் போவதைத் தடுக்க ரோஸ் வாட்ட ர்

கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி கொளுத்தும் வெயிலால் சருமத்தின் நிறம் கருமையாகத் தொடங்கிவிடும். நீங்கள் வெளியே அதிகம் சுற்றுபவராக இருந்தால், இந்த கோடை வெயிலால் சருமத்தின் நிறம் மாறாமல் இருக்க வேண்டுமெனில், சருமத்திற்கு பராமரிப்புக்களை தவறாமல் கொடுத்து வர வேண்டும்.தினமும் சருமத்திற்கு ஒருசில பராமரிப்புக்களை தவறாமல் கொடுப்பதன் மூலம் சரும செல்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, சரும நிறமும் மேம்படுவதுடன் சருமம் புத்துணர்ச்சியுடனும் இருக்கும். அப்படி சரும நிறத்தை மேம்படுத்த உதவும் ஒரு அற்புதமான பொருள் தான் ரோஸ் வாட்டர்.இந்த ரோஸ் வாட்டரைக் கொண்டு தினமும் இரவு முகத்திற்கு ஒருசில ஃபேஸ் பேக்குகளை போட்டு வந்தால், வெயிலால் முகம் கருமையாவது தடுக்கப்படுவதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் இருக்கும். இப்போது சரும நிறத்தை அதிகரிக்க உதவும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்குகள்.

முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் 

தேவையான பொருட்கள்: * 

முல்தானி மெட்டி பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் * 

ரோஸ் வாட்டர் - 3 டேபிள் ஸ்பூன் 

பயன்படுத்தும் முறை: *  முதலில் ஒரு பௌலில் முல்தானி மெட்டி பவுடரை எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

காபி பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் 

தேவையான பொருட்கள்: * 

காபித் தூள் - 2 டேபிள் ஸ்பூன் * 

ரோஸ் வாட்டர் - 2-3 டேபிள் ஸ்பூன் 

பயன்படுத்தும் முறை: * ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.

சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் 

தேவையான பொருட்கள்: * 

சந்தன பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் * 

ரோஸ் வாட்டர் - 3 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை: * ஒரு பௌலில் சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் 

தேவையான பொருட்கள்: * 

கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் * 

ரோஸ் வாட்டர் - 3 டேபிள் ஸ்பூன் 

பயன்படுத்தும் முறை: * முதலில் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதை முகம், கழுத்து, கைகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் 

தேவையான பொருட்கள்: * 

கற்றாழை ஜெல் - 2 டேபிள் ஸ்பூன் * 

ரோஸ் வாட்டர் - 2 டேபிள் ஸ்பூன் 

பயன்படுத்தும் முறை: * முதலில் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின் அதை முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் இரவு பயன்படுத்தி வந்தால், முகம் கருத்துப் போவதைத் தடுக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News