தேவையான பொருட்கள்:பாஸ்மதி அரிசி - 1 கப்,நறுக்கிய(அ) துருவிய பீட்ரூட்- ½கப்,தேங்காய்ப் பால் - ½கப்,வெங்காயம் - 1,எண்ணெய், உப்பு-தேவைக்கு.தாளிக்க: பட்டை, கிராம்பு, பிரியாணி இலை - தலா 1, இஞ்சி, பூண்டு விழுது-1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1.செய்முறை:குக்கரில் எண்ணெய் ஊற்றித் தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளித்து, வெங்காயம் வதக்கி, பிறகுபீட்ரூட், உப்பு சேர்த்து வதக்கவும். தேங்காய்ப் பால், 4 கப் தண்ணீர் சேர்த்துக் கொதித்ததும் 15 நிமிடங்கள்ஊற வைத்த அரிசியைச் சேர்த்து மூன்று விசில் வந்ததும் இறக்கவும். சுவை யான பீட்ரூட் பிரியாணி தயார்.
தேவையான பொருட்கள் -அரிசி: 1.5 கப் (ஊற வைத்தது)வாழைப்பூ: 1 கப் (நரம்பு நீக்கி நறுக்கியது)வெங்காயம்: 2 (நீளவாக்கில் நறுக்கியது)தக்காளி: 1 (பொடியாக நறுக்கியது)இஞ்சி-பூண்டு விழுது: 1 ஸ்பூன்பச்சை மிளகாய்: 2மசாலா தூள்: மஞ்சள் தூள், மிளகாய் தூள், பிரியாணி மசாலாதாளிக்க: பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலைமல்லி-புதினா: சிறிதளவுசெய்முறை -சீரக சம்பா அல்லது பாசுமதி அரிசியை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.வாழைப்பூவை மோரில் சிறிது நேரம் வைத்து பிறகு எண்ணெயில் லேசாக வதக்கி தனியாக வைக்கவும்.குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி தாளிப்புப் பொருட்களை சேர்த்து, வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் வதக்கவும்.இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி சேர்த்து மசாலாப் பொடிகளைப் போட்டு நன்றாக வதக்கவும்.வதக்கிய வாழைப்பூ, புதினா, மல்லி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அரிசியைபோடவும்.மிதமான தீயில் வைத்து குக்கரை மூடி 1 விசில் விட்டு எடுக்கவும். வாழைப்பூ பிரியாணி தயார்.
தேவையான பொருட்கள் -பாசுமதி அரிசி: 1 கப் (10 நிமிடங்கள் ஊற வைக்கவும்)தாமரை விதை: 1½கப்வெங்காயம்: 2 (நறுக்கியது)தக்காளி: 1 (நறுக்கியது)இஞ்சி-பூண்டு விழுது: 1 ஸ்பூன்பிரியாணி மசாலா: பட்டை, கிராம்பு, ஏலக்காய்மஞ்சள் மற்றும் மிளகாய்த்தூள்: தேவையான அளவுஎண்ணெய் அல்லது நெய்: தேவையான அளவுஉப்பு மற்றும் தண்ணீர்: தேவையான அளவுசெய்முறைபாசுமதி அரிசியை நன்கு கழுவி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.கடாயில் சிறிது நெய் விட்டு, தாமரை விதைகளை மொறுமொறுப்பாகும் வரை லேசாக வறுத்து தனியாகவைக்கவும்.குக்கர் அல்லது பாத்திரத்தில் நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு தாளித்து, வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டுவிழுது சேர்த்து வதக்கவும்.தக்காளி மற்றும் மசாலாப் பொடிகளைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதித்ததும், ஊறவைத்த அரிசியைச் சேர்க்கவும்.சாதம் பாதியாக வெந்ததும் வறுத்த தாமரை விதைகளைச் சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து தம்முறையில் வேக வைத்து எடுக்கவும். தாமரை விதை பிரியாணி தயார்.
தேவையான பொருட்கள் - பாசுமதி அரிசி: 2 கப் (20 நிமிடங்கள் ஊறவைத்தது)பன்னீர்: 200 கிராம் (சிறு துண்டுகளாக நறுக்கியது)வெங்காயம்: 2 (நீளமாக நறுக்கியது)தக்காளி: 2 (பொடியாக நறுக்கியது)இஞ்சி-பூண்டு விழுது: 2 ஸ்பூன்பச்சை மிளகாய்: 3புதினா & கொத்தமல்லி: கைப்பிடி அளவுமசாலா தூள்: மஞ்சள் தூள் அரை ஸ்பூன், மிளகாய் தூள் 1 ஸ்பூன், மல்லித்தூள் 1 ஸ்பூன், கரம் மசாலா அரைஸ்பூன்தாளிக்க: நெய் 3 ஸ்பூன், எண்ணெய் 2 ஸ்பூன், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்புதண்ணீர் மற்றும் உப்பு: தேவையான அளவுசெய்முறைகடாயில் சிறிதளவு நெய் விட்டு, பன்னீர் துண்டுகளை லேசாக பொன்னிறமாக வறுத்து தனியாகவைக்கவும்.குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை மற்றும் வாசனைப் பொருட்களைச்சேர்க்கவும்.நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பின் இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும்.தக்காளி, புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கி, மசாலா தூள் மற்றும் உப்பு போடவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும், ஊறவைத்த பாசுமதி அரிசி மற்றும் வறுத்த பன்னீரைச்சேர்க்கவும்.குக்கரை மூடி மிதமான தீயில் ஒரு விசில் விட்டு எடுக்கவும். சுவையான பன்னீர் வெஜ் பிரியாணி தயார்.
சர்க்கரைவள்ளி கிழங்கு வடைதேவையான பொருட்கள் -சர்க்கரைவள்ளி கிழங்கு (வேகவைத்து மசித்தது) - 1 கப்,பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1,பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது),இஞ்சி (துருவியது) - சிறிய துண்டு,கடலை மாவு அல்லது அரிசி மாவு - 2 முதல் 3 ஸ்பூன்,கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு,சோம்பு - அரை ஸ்பூன்,உப்பு - தேவையான அளவு,எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.செய்முறை -ஒரு அகலமான பாத்திரத்தில் வேகவைத்து மசித்த சர்க்கரைவள்ளிகிழங்கை எடுத்துக் கொள்ளவும்.அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, சோம்புமற்றும் உப்பு சேர்க்கவும்.கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.மாவு பதம் வர கடலை மாவு அல்லது அரிசி மாவு சேர்த்துப் பிசையவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த கலந்தைக் சிறியவடைகளாகத் தட்டிப் போடவும்.மிதமான தீயில் வைத்து, இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறும்வரை பொரித்து எடுக்கவும்.
தேவையான பொருட்கள்சக்கரவள்ளி கிழங்கு (வேக வைத்து மசித்தது) - 1 கப்,வெல்லம் - 3/4 கப்,கோதுமை மாவு - 1/2 கப்,தேங்காய் துருவல் - 1/4 கப்,ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்,நெய் - 1 டேபிள்ஸ்பூன்,உப்பு - ஒரு சிட்டிகை,எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.செய்முறைசக்கரவள்ளி கிழங்கை நன்றாக வேக வைத்து, தோல் நீக்கிமசித்துக்கொள்ளவும்.மசித்த கிழங்குடன் துருவிய தேங்காய், ஏலக்காய் தூள், நெய் மற்றும்ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி, கிழங்குகலவையுடன் ஊற்றவும் அல்லது பொடித்த வெல்லத்தை நேரடியாகச்சேர்த்துப் பிசையவும்.அதனுடன் கோதுமை மாவு சேர்த்து, போண்டா மாவு பதத்திற்குகெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிறிய உருண்டைகளாகப்பிடித்து போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு போண்டா தயார்.
தேவையான பொருட்கள்சர்க்கரைவள்ளி கிழங்கு - 1 (தோல் சீவி மெல்லிய வில்லைகளாகநறுக்கியது)கடலை மாவு - 1 கப்அரிசி மாவு - கால் கப்மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டிபெருங்காயத்தூள் - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுஎண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவுசெய்முறைஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள்,பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ளவும்.கொஞ்சம் சிறிதாக தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு பஜ்ஜி மாவுகரைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.நறுக்கிய சர்க்கரைவள்ளி கிழங்கு துண்டுகளை மாவில் முக்கிஎண்ணெயில் போடவும்.மிதமான தீயில் வைத்து, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும்எடுக்கவும்.பிரெட் பஜ்ஜி போல் சிறு இனிப்பு சுவையில் மிக அருமையாக இருக்கும்இந்த சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி...தேங்காய், தக்காளி சட்னியுடன் சேர்த்து சுவைக்கவும்.
.தேவையான பொருட்களசர்க்கரைவள்ளி கிழங்கு - 1 கப் (வேகவைத்து மசித்தது)வெல்லம் - முக்கால் கப் (பொடித்தது)துருவிய தேங்காய் - அரை கப்ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டிநெய் - 1 தேக்கரண்டிமைதா மாவு (வெளி கோட்டிங் செய்ய) - 1 கப்உப்பு - ஒரு சிட்டிகைஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவுசெய்முறைவாணலியில் நெய் ஊற்றி, துருவிய தேங்காயை லேசಾಗಿ வதக்கவும்.அதனுடன் மசித்த சர்க்கரைவள்ளி கிழங்கு மற்றும் பொடித்த வெல்லம்சேர்க்கவும்.வெல்லம் கரைந்து கிழங்குடன் சேர்ந்து கெட்டியான பதத்திற்கு வரும்வரை கிளறவும்.பின் ஏலக்காய் தூள் சேர்த்து, இறக்கி ஆறவிடவும். ஆறியதும் சிறுஉருண்டைகளாக உருட்டவும்.மைதா மாவுடன் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவுபதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.உருட்டிய பூரண உருண்டைகளை மாவில் முக்கி, சூடான எண்ணெயில்போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.சர்க்கரைவள்ளி கிழங்கு சுசியம். தயார்.
தேவையான பொருட்கள்சர்க்கரைவள்ளிக்கிழங்கு (துருவியது) – ஒன்றரை கப்இட்லி அரிசி அல்லது பச்சரிசி - 1 கப்கடலைப்பருப்பு - 3/4 கப்துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 2 டேபிள் ஸ்பூன்காய்ந்த மிளகாய் - 6 முதல் 8சோம்பு அல்லது சீரகம் - 1 டீஸ்பூன்பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)முருங்கைக்கீரை – சிறிதளவு (தேவைப்பட்டால்)பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்உப்பு - தேவையான அளவுஎண்ணெய் - அடை சுடத் தேவையான அளவுசெய்முறைஅரிசி மற்றும் பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து 3 மணி நேரம்தண்ணீரில் ஊற வைக்கவும்.ஊறிய பருப்புடன் காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்துகொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.அரைத்த மாவில் துருவிய சர்க்கரைவள்ளிக்கிழங்கு, நறுக்கியவெங்காயம் மற்றும் முருங்கைக்கீரை சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்.தோசைக் கல்லை சூடானதும், மாவை ஊற்றி அடைகளாக வார்த்துஎடுக்கவும்.நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாகபொரிந்து வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை தயார்.இது மிகவும் சத்தான மற்றும்சுவையான ஒரு சிற்றுண்டி.
தேவையான பொருட்கள்சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 250 கிராம் (வேகவைத்து மசித்தது)வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)பச்சை மிளகாய் - 1 அல்லது 2 (பொடியாக நறுக்கியது)இஞ்சி - சிறிய துண்டு (துருவியது)மல்லித்தழை - சிறிதளவுமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்கார்ன்ஃப்ளார் அல்லது பிரெட் தூள் - 2 டேபிள் ஸ்பூன் (கட்லெட்உடையாமல் இருக்க)உப்பு - தேவையான அளவுஎண்ணெய் - கட்லெட் பொரிக்க தேவையான அளவுசெய்முறைஒரு பாத்திரத்தில் வேகவைத்து மசித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கைஎடுங்கள்.அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும்மல்லித்தழை சேர்க்கவும்.மிளகாய்த்தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப்பிசையவும்.மாவு பதத்திற்கு வந்ததும், கார்ன்ஃப்ளார் அல்லது பிரெட் தூள் சேர்த்துப்பிசைந்து கொள்ளவும்.கலந்த கலவையைச் சிறிய உருண்டைகளாக எடுத்து கட்லெட் போலத்தட்டையாகத் தட்டவும்.அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளைக் கல்லில் வைத்து மிதமான தீயில்இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமானசர்க்கரைவள்ளிக்கிழங்கு கட்லெட் தயார்