கேப்ஸிகம் ரைஸ்.
தேவையான பொருட்கள்:
3 கப் உதிரியாக வடித்த சாதம்,பெரிய ப.குடமிளகாய்,2 மீடியம் சைஸ் வெங்காயம்,3சிறியசைஸ் தக்காளி,
3/4 டீ ஸ்பூன்ம.தூள், சி.மிளகாய், 8 பூண்டு பல், ருசிக்குஉப்பு.தேவையான அளவுதண்ணீர்
தாளிக்க:-
1டீ. ஸ்பூன்கடுகு,1/2 ஸ்பூன்க.பருப்பு,1/2 ஸ்பூன் உ.பருப்பு,1 கொத்து கறிவேப்பிலை,2 ஸ்பூன்எண்ணெய்.
செய்முறை:
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை மெல்லியதாகநீளவாக்கில் நறுக்கவும். குடமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும்.சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில், சி.மிளகாய், பூண்டை சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உ.பருப்பு,க.பருப்பு, சேர்த்து தாளிக்கவும்.தாளித்ததும், வெங்காயம், ம.தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.வதங்கியதும், குடமிளகாய், தக்காளி, சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த பொடியை சேர்த்து வதக்கவும்.
பின், வடித்த சாதத்தை போட்டு 2 நிமிடம் நன்கு கலந்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*கேப்ஸிகம் ரைஸ்*தயார். இதற்கு சைட்டிஷ் தேவையில்லை.
0
Leave a Reply